கொரோனாவிலிருந்து குணமடைந்தார் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்.. டிஸ்சார்ஜ்!
திருச்சி: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பூரண நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
இந்தியாவில் அரசியல் தலைவர்கள் வரிசையாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில வாரம் முன் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். தற்போது இவர் குணமடைந்துள்ளார்.

இது தொடர்பாக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 03.08.2020 அன்று திருச்சி சுந்தரம் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர் விவேக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தனி கவனம் செலுத்தி சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். இன்று (24.08.2020) பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பினார்.
இவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து பிரார்த்தனை செய்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சர்வ சமயத்தினர், இ.யூ. முஸ்லிம் லீக் அங்கத்தினர்கள் அனைவருக்கும் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இல்லம் திரும்பியுள்ள தலைவர் அவர்களை சிறிது காலத்திற்கு யாரும் நேரில் சந்திக்க வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications