காவிரி கரையில் பிணங்கள்.. குளித்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம்.. திருச்சியில் பரபரப்பு!
கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி: ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள்.. காவிரி கரையோரம் ஒதுங்கி கிடந்த பிணங்களை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்! இறந்து கிடந்தது ஒரு கள்ளக்காதல் ஜோடி!
திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்... 31 வயதாகிறது.. சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார்.நல்ல வருமானமும் கிடைத்து வந்தது.
தென்னூர் இனாம்தோப்பு பகுதியை சேர்ந்த காவ்யா என்ற பெண்ணை இவர் காதலித்தார்.. காவ்யாவுக்கு வயசு 23 ஆகிறது.. அவரையே கடந்த வருடம் திருமணமும் செய்து கொண்டார்.. 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

விஷ பாட்டில்
இந்நிலையில் ரமேஷ், ஒரு இளம்பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டு, திருச்சி முத்தரசநல்லூர் அருகே உள்ள பழுர் காவிரி கரைக்கு வந்தார். காரிலேயே அந்த பெண்ணுடன் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் திடீரென பார்க்கும்போது, இருவரின் சடலம் கிடந்தது.. அவர்களுக்கு பக்கத்தில் ஒரு விஷ பாட்டில் விழுந்து கிடந்தது.

2 சடலங்கள்
வாயில் நுரை தள்ளியபடியே இருந்ததை கண்டு போலீசாருக்கு உடனடியாக தகவல் தந்தனர். அதன்படி ஜீயபுரம் போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டனர்.. திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். பிறகு அந்த காரில் போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 செல்போன்கள் இருந்தன. அதை ஆய்வு செய்தபோதுதான், ரமேஷூடன் தற்கொலை செய்து கொண்டது, திருச்சி தென்னூர் சங்கீதபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவரது மகள் ரீனா என்பதும், வயசு 18 என்பதும் தெரியவந்தது.

மாணவி
ஒரு பிரைவேட் காலேஜில் இப்பதான் ரீனா முதலாம் வருடம் படித்து வந்துள்ளார்.. இவரது காரில் காலேஜுக்கு போகும்போது லவ் ஆரம்பமாகி உள்ளது.. நாளடைவில் தீவிரமான காதலாகி விட்டது.. எனினும் தற்கொலைக்கு காரணம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. ஒருவேளை இந்த கள்ளக்காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்து விட்டதால் இந்த முடிவை எடுத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற விசாரணை நடந்து வருகிறது.

நிறைய பெண்கள்
மற்றொருபுறம் திருமணத்துக்கு முன்பே ரமேஷூக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.. இது சம்பந்தமான வழக்குகள் போலீசில் உள்ளன.. அதனால் பாதிக்கப்பட்ட யாரேனும் திட்டமிட்டு விஷம் கொடுத்து கொன்று விட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. ஆனால், ரமேஷை மனசார காதலித்து.. அவரை முழுசாக நம்பி.. கல்யாணமும் செய்த அந்த அப்பாவி பெண், 7 மாத குழந்தையுடன் நிற்கதியாய் நிற்கின்றார்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications