“மனித குலத்திற்கு செய்யும் சேவையே கடவுளுக்கான சேவை..” இந்து முன்னணி நிர்வாகிக்கு நீதிமன்றம் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க விவசாயிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி பிரமுகர் தொடர்ந்த வழக்கில், அவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சார்ந்த இளங்கோ. இவர் இந்த பகுதியில் இந்து முன்னணி பிரமுகராக இருக்கிறார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், "திருச்சி கல்விக்குடி கிராமத்தில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வந்தது.

Court advises Hindu Munnani executive who filed suit over use of temple land

பல விவசாயிகள் தங்களது மூட்டைகளை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடுக்கி வைத்து பயன்பெற்று வந்தனர். தற்போது கோவில் கும்பாபிஷேக பணிக்காக கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சிமெண்ட், செங்கல் போன்ற மூலப்பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் பணிகளுக்கு இடையூறாக தற்போது நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் கோவில் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே கோவில் பூஜைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதை அகற்றக் கோரியும் நடவடிக்கை இல்லை.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கவும் நெல் கொள்முதல் செய்வதற்கு கோவில் இடத்தை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கோவில் நிலத்தில் கோவில் பணிகளுக்கு இடையூறாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் மூட்டைகள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

Court advises Hindu Munnani executive who filed suit over use of temple land

வாதங்களை கேட்ட நீதிபதிகள், "மனித குலத்திற்கு செய்யும் சேவைதான் கடவுளுக்கும் செய்யும் சேவை; விவசாயிகள் தங்களது நெல்மணிகளை கோவில் நிலத்தில் அடுக்கி வைப்பதில் எந்த தவறும் இல்லை. கோவில்கள் மக்களுக்கானதுதான், நெல் கொள்முதல் நிலையமும் தற்காலிகமாக தான் அங்கே செயல்பட்டு வருகிறது. எனவே நெல் மூட்டைகள் வைக்க தடை விதிக்க முடியாது" என தெரிவித்தனர். மேலும், கோவில் கட்டுமானப் பணிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில், விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும், இதை கோவில் ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+