"எங்க மகனுக்கு கொரோனாவா".. அதிர்ந்து போன பெற்றோர்.. பூச்சி கொல்லி மருந்தை குடித்த சோகம்!

மகனுக்கு தொற்று உறுதியானதால் பெற்றோர் விஷம் குடித்தனர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மகனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததுமே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அழுதுபுரண்டனர்.. அவர்களால் இதை தாங்கி கொள்ளவே முடியாத நிலையில், வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்துவிட்டனர்.. இந்த பரபரப்பு சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

கடந்த 23-ந் தேதி திருச்சி கலெக்டர் ஆபீசில் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டது.. இந்த ரிசல்ட்டுகள் நேற்று வெளியானது.. அப்போதுதான், மயிலாடுதுறையை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரி, திருச்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் என 4 பேருக்கு அறிகுறி உள்ளது தெரியவந்தது.

covid19: Parents attempted suicide as their son was diagnosed with coronavirus

ஆனால் அது தொற்று என உறுதி செய்யப்படவில்லை.. திரும்பவும் டெஸ்ட் எடுத்தால்தான் உறுதியாக சொல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் மாவட்டத்தில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்து இருக்கிறது... அதேசமயம், 37 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கும் சென்றுள்ளனர்.

இதனிடையே, மற்றொரு பரபரப்பு சம்பவம் சிறுகனூர் பகுதியில் நடந்துள்ளது.. இங்கு 35 வயதுடைய நபர் ஒருவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்... கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.. வந்த உடனேயே அவருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதில் தொற்று இருப்பது உறுதியானது. அதனால் உடனடியாக சுகாதாரத்துறையினர் அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மகனுக்கு தொற்று ஏற்பட்டதால் அவரது பெற்றோர் தனிமைப்படுத்தப்பட்டனர்... அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது... தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும், மகனுக்கு தொற்று ஏற்பட்டதை அவர்களால் தாங்கவே முடியவில்லை.. அழுது புரண்டனர்.. மன உளைச்சலுடன் இருந்த அவர்கள், ஒருகட்டத்தில் தற்கொலை செய்யவும் முடிவு செய்துவிட்டனர்.

வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து, வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்தனர்.. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனுர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+