பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதன்முறையாக முதல்வர் ஜோசப் விஜய் நாளை திருச்சிக்கு வருகிறார். தேர்தலில் வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், விமான நிலையத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரம் சாலைவலம் வந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார். இதற்கிடையே அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சி.வி. சண்முகம் விஜய்யை சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முதல்வர் பொறுப்பில் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசியல் பயணங்களில் ஒன்றாக இந்த திருச்சி பயணம் பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தை முதன்முதலில் திருச்சியில் தொடங்கிய விஜய், வெற்றிக்குப் பிறகான முதல் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தையும் அதே நகரில் நடத்த முடிவு செய்துள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வரும் முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக பொதுமக்களை சந்திக்கும் வகையில் சாலைவலம் செல்ல உள்ளார். திருச்சி - புதுக்கோட்டை சாலை, டிவிஎஸ் சோதனைச்சாவடி, பழைய பால்பண்ணை, சத்திரம் பேருந்து நிலையம் வழியாக தூய வளனார் கல்லூரி மைதானத்தை அவர் சென்றடைய உள்ளார்.
விஜய் திருச்சி பயணம்
இந்த சாலைவலத்தின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாகனத்தில் இருந்தபடியே மக்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தூய வளனார் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
முதல்வரின் பாதுகாப்பு மற்றும் ஓய்வு வசதிகளை கருத்தில் கொண்டு குளிரூட்டப்பட்ட சிறப்பு அறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் தவெக வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி வெறும் நன்றி அறிவிப்பு கூட்டமாக மட்டுமல்லாமல், ஆட்சிக்கு வந்த பிறகான கட்சியின் முதல் பெரிய நிகழ்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக எதிர்வரும் இடைத்தேர்தல்களையும் கருத்தில் கொண்டு இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
சி.வி.சண்முகம்
இந்த சூழலில் தான் அதிமுக மூத்த தலைவர் சி.வி. சண்முகம் விஜய்யை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்த சி.வி. சண்முகம், கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சில அரசியல் முடிவுகள் குறித்து அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் எடுக்கும் அடுத்தகட்ட அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், சி.வி. சண்முகம் நேரடியாக தவெகவில் இணையப்போகிறார் என்ற தகவலுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இருப்பினும் விஜய்யை சந்திக்கலாம் என்ற தகவலே அதிமுக பர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சமூகம்
வன்னியர் சமூகத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட தலைவராக சி.வி. சண்முகம் பார்க்கப்படுகிறார். குறிப்பாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் அவருக்கு தனிப்பட்ட ஆதரவு வட்டம் உள்ளது. இதனால் அவர் அரசியல் ரீதியாக எடுக்கும் எந்த முடிவும் அந்த பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சில முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தவெகவைநோக்கி நகர்ந்து வருகின்றனர்.
தவெக
இந்த நிலையில் சி.வி. சண்முகத்தின் அரசியல் நகர்வு அதிமுக தலைமையால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தவெக தனது கட்சியை பலபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகளை இழுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதன் காரணமாகவே சி.வி. சண்முகம் தொடர்பான தகவல்கள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்!












Click it and Unblock the Notifications