வாய்க்காலில்.. பெண்ணை சீண்டிய இளைஞர்.. இரவில் திரண்ட ஊர்ஜனம்.. போலீசாருக்கே தர்மஅடி.. என்னாச்சு?

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பாத்திரம் விளக்கி கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை, பொதுமக்களே தர்மஅடி தந்தனர்.. அப்போது, அவரை மீட்க வந்த போலீசாரும் தாக்கப்பட்ட சம்பவம் குளித்தலையில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

குளித்தலை சுங்ககேட் அருகே உள்ள தென்கரை வாய்க்கால் பகுதியில் நேற்றிரவு நடந்த சம்பவம் இது.. அங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 31 வயதாகிறது.

நேற்றிரவு அந்த பகுதியில் செல்லும் வாய்க்கால் ஒன்றில் உட்கார்ந்து பாத்திரம் விளக்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வாய்க்காலில் நீந்தியபடி, ஒரு இளைஞர் அங்கு வந்துள்ளார்..

 கட்டிப்பிடித்தார்

கட்டிப்பிடித்தார்

அந்த பெண்ணை, திடீரென கட்டிப்பிடித்து தூக்கி தவறாக நடக்கவும் முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார்.. இதனால் அந்த இளைஞர் செய்வதறியாது விழித்து, வாய்க்காலுக்குள் மூழ்கியபடி இருந்துள்ளார்.. ஆனால், அதற்குள் இளம்பெண்ணின் சத்தத்தை கேட்டு, அங்கிருந்த இளைஞர்கள் திரண்டு வந்து, வாய்க்காலுக்குள் குதித்து, அந்த இளைஞரை பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர்...

 நொறுங்கிய வாகனம்

நொறுங்கிய வாகனம்

அந்த நபர் உள்ளூரை சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்தது.. இதையடுத்து, பொதுமக்களும், இளைஞர்களும் சேர்ந்து இளைஞரை அங்கேயே அடித்து துவைத்தனர்... இளைஞரோ வலி பொறுக்க முடியாமல் அலறினார்.. இந்த தகவல், குளித்தலை சுங்ககேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த குளித்தலை போக்குவரத்து போலீஸாருக்கு எட்டியது.. அதனால், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. நடந்த சம்பவம் என்ன என்பதைகூட நெரிசலில் அவர்களால் கேட்க முடியவில்லை.

 சமாளிப்பு

சமாளிப்பு

பொதுமக்களிடம் எக்கச்சக்கமாக சிக்கி கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு, போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவர முயற்சித்தனர்... ஆனாலும், அங்கு ஏராளமான கூடி அந்த நபரை தாக்கியபோது போலீசாரும் சரமாரியாக தாக்கப்பட்டுவிட்டனர்.. மேலும், அவர்கள் வந்த வாகனமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது... நீண்ட நேர போராட்டத்திற்கு, ஒரு வழியாக கூட்டத்தை சமாளித்து, அந்த இளைஞரை போலீசார் மீட்டு குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்...

 குளித்தலை

குளித்தலை

பெண்மணியிடம் தவறாக நடக்க முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.. அந்த இளைஞர், நாமக்கல் மாவட்டம் கீழப்பாளையத்தை சேர்ந்தவராம்.. பெயர் சிவக்குமார்.. 30 வயதாகிறது என்பது தெரியவந்துள்ளது.. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இளைஞரை மீட்க சென்றபோது, போலீசாரும் தாக்கப்பட்ட சம்பவம் குளித்தலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+