மனைவிய டைவர்ஸ் பண்ணிட்டேனா? சீமான் ஒரு மைக் புலிகேசி! பொட்டில் அடித்தாற்போல் பேசிய வருண்குமார் IPS.!
திருச்சி: நான் எனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தரம் தாழ்ந்த தகவல்களை சீமான் தரப்பு பரப்பி வருகிறது எனவும், சீமான் ஒரு மைக் புலிகேசி எனவும் திருச்சி டிஐஜி வருண்குமார் கிண்டல் செய்துள்ளார். மேலும் என்ன ஆனாலும் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமார், நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு பழிவாங்குவதாகவும், சீமான் புகார் கூறியிருந்தார். மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த 30ஆம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வருண்குமார் திருச்சி ஐஜியாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜி ஆகவும் உள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து இருந்தார்.
இந்நிலையில், டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் வருண்குமார் ஐபிஎஸ் ஆஜராகி இருந்தார்.
தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சீமான் மீது நான் தொடர்ந்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதன் காரணமாக இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் எனது மனைவி வந்திதா பாண்டே திண்டுக்கல்லில் டிஐஜியாக இருக்கிறார். அவருக்கும் எனக்கும் விவாகரத்து நடந்து விட்டதாக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தனிப்பட்ட முறையில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அவர்கள் தரக்குறைவாக விமர்சித்ததால் தான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன்.
நிச்சயம் அதனை வாபஸ் பெற போவதில்லை. வாபஸ் பெறுவது போல் இருந்தால் நான் வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும், நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். சீமான் பற்றி எல்லாம் பேச விரும்பவில்லை. அவர் ஒரு மைக் புலிகேசி. தரம் குறைந்த மனிதர் " என விமர்சித்தார்.
-
விஜயா.. ரஜினியா.. ராகவா லாரன்ஸ் மெகா திட்டம்.. திருச்சியில் ஆட்டம் ஆரம்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications