நண்பர்களுக்கு தகராறு.. இளைஞர் வெட்டிக் கொலை.. திருச்சியில் குடிபோதையில் வெறிச் செயல்
திருச்சி: திருச்சி அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை காவலர்கள் தேடி வருகின்றனர்.
திருவானைக்காவல் நரியன் தெரு பகுதியில் வசிப்பவர் சரவணன். இவரது மகன் விக்னேஷ் (19). இவர், சனிக்கிழமை தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, நண்பர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விக்னேஷின் இருசக்கர வாகன சாவியை நண்பர்கள் பறித்துக் கொண்டனர்.

இதனால், விக்னேஷ் கோபமடைந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர், இரவு 11 மணிக்கு விக்னேஷுக்கு போன் செய்து ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் வந்தால் சாவியை தருவதாக நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அங்கு சென்ற விக்னேஷுக்கு மீண்டும் நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்தவர்கள் விக்னேஷை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், பலத்தக் காயமடைந்த விக்னேஷை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த விக்கி, கோகுல், மாரி, உதயகுமார் ஆகிய 4 பேரை காவல்ரகள் தேடி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் பகுதியில் 15 நாட்களில் நடந்த இரண்டாவது கொலை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications