எதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்!
Recommended Video
திருச்சி: "சசிகலாவை வீழ்த்த எதிரி வெளியில் இருந்து வந்திருந்தால்.. நான் தலையை சீவியிருப்பேன். ஆனால் குடும்பத்துக்கு உள்ளேயே எதிரி என்பதால் நான் கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்.. சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிடக்கூடாது என்றே தினகரன் நினைக்கிறார்.. அவரை தனிமைப்படுத்தினால்தான் அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்" என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இறந்த பிறகு.. தினகரனுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அம்மா அணி என்கிற பெயரில் செயல்பட்டு வந்த திவாகரன், அம்மா அணியை "அண்ணா திராவிடர் கழகம்" என்று தனிக்கட்சியை தொடங்கினார்.
இதையடுத்து பெரிய அளவில் இந்த கட்சியின் தாக்கம் இல்லாவிட்டாலும், சகோதரி சசிகலா மீது ஆழ்ந்த பற்றை உடையவர். அவர் மீது எந்த அளவுக்கு பற்றும், மரியாதையும் உள்ளதோ அதே அளவுக்கு தினகரன் மீது அதிருப்தியை உடையவர்.

சசிகலா
இந்நிலையில், திருச்சியில் அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாக கூறினார். பின்னர், டிடிவி தினகரனை சரமாரியாக சாடி விமர்சித்தார். அப்போது அவர் சொன்னதாவது:

எதிரி
"சசிகலா என் சகோதரி என்ற முறையில் அவரை காப்பாற்றவேண்டும். அவரை மீட்க வழியில்லாமல் இல்லை. ஆனால் அவர் அதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும். சசிகலாவை வீழ்த்த எதிரி வெளியில் இருந்து வந்திருந்தால் நான் தலையை சீவியிருப்பேன். ஆனால் குடும்பத்துக்கு உள்ளேயே உறவினர் எதிரி என்பதால் கையை பிசைந்து கொண்டிருக்கிறேன்.

குழப்பம்
அமமுக ஆண்டிகள் கூடி கட்டிய மடம் போன்றது. செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் வரிசையில் இப்போது புகழேந்தி. எடப்பாடி எனக்கு பணம் கொடுத்து அமமுகவில் குழப்பம் ஏற்படுத்த செய்வதாக கூறுவது கையாளாகாத குற்றச்சாட்டு. எனக்கு பணம் கொடுக்க இதுவரை யாரும் பிறந்து வரவில்லை.

தனிமை
அதிமுகவை ஒருங்கிணைக்க தினகரன் தடையாக உள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்று தினகரன் நினைக்கிறார். தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை கடந்த தேர்தலில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. தினகரன் தனிமைப்படுத்தப்பட்டால்தான் அதிமுக ஒன்றிணையும்.

ஜெயலலிதா
சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு 133 எம்எல்ஏக்கள், ஒரு கேபினட், துணை பொதுச்செயலாளர் பதவியோடு தான் தினகரனிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றார் சசிகலா. ஆனால் இன்று என்ன வைத்திருக்கிறார். இப்போது இருப்பது ஜெயலலிதா காலத்து அதிமுக அல்ல. நிறைய விஷயங்களை அதிமுக தலைமையில் இருப்பவர்கள் சமரசம் செய்து கொள்கின்றனர்.

சுயமரியாதை
தமிழக நலனை பாதிக்க கூடிய விஷயங்களை கூட புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் அல்லது ஆதரிக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். ஆட்சியாளர்கள் நிலைமை தாழ்ந்து போய்விட்டது. சுயமரியாதை எங்கே இருக்கிறது? ஆட்சியை மட்டும் எடப்பாடி பழனிசாமி கட்டுபாட்டில் வைத்திருக்கிறார். கட்சியை கட்டுபாட்டில் வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications