திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினால்.. எந்த ஆதீனமும் இருக்க முடியாது! பரபரப்பை கிளப்பிய கி.வீரமணி

Google Oneindia Tamil News

திருச்சி: திக சார்பில் நடைபெற்ற பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திக தலைவர் கி.வீரமணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

Recommended Video

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தினால்.. எந்த ஆதீனமும் இருக்க முடியாது! பரபரப்பை கிளப்பிய கி.வீரமணி

    திருச்சியில் திராவிட கழக மகளிரணி மகளிர் பாசறைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி திராவிட பாடல் குறித்தும் திமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    சனாதன தர்மம் குறித்து பேசுவதா? வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல! ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்! சனாதன தர்மம் குறித்து பேசுவதா? வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல! ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்!

    சுயமரியாதை

    சுயமரியாதை

    திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, "திராவிட மாடல் ஆட்சி என்பது சுயமரியாதை,சமூக நல்லிணக்கம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகும்‌. இருப்பினும் மனிதக் குலத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் உரிமையை அடைய வேண்டும் எனத் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கினார். ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற பிரிவு பேதம் இருக்கக் கூடாது என்று சொல்லி பெண்களுக்குச் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சுயமரியாதை மாநாட்டைச் செங்கல்பட்டில் நடத்தினார். இந்த மாநாட்டில் சொத்துரிமை, படிப்புரிமை, உத்தியோக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    சொத்துரிமை

    சொத்துரிமை

    அண்ணல் அம்பேத்கர் பிரதமர் நேரு காலத்தில் சட்ட அமைச்சராக இருந்த போதும் கூட இந்து சட்டத் திருத்த மசோதா கொண்டு வரும் நேரத்தில் ஒரு சில உரிமைகளுக்கு மட்டும் தான் சனாதனிகள் இடம் கொடுத்தனர். பிரதமர் நேருவின் கருத்துக்களைக் கூட எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் கொடுத்தனர். பெண்களுக்குச் சொத்துரிமை என்ற அம்பேத்கரின் சட்டத்தை இந்து சட்ட மசோதாவில் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அம்பேத்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

     திராவிட மாடல்

    திராவிட மாடல்

    பின்னர் சோனியா காந்தி தலைமையில், மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது திமுக அங்கம் வகித்த போது அந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சொத்துரிமை சட்டம் நிறைவேறியது. பெண்களுக்கான 50% இட ஒதுக்கீட்டைத் திராவிட மாடல் ஆட்சி உள்ளாட்சித் தேர்தலில் செயல்படுத்தியது பாராட்டுக்குரியது. அனைவருக்கும் அனைத்தும், பிறபொக்கும் எல்லா உயிருக்கும் என்பது தான் திராவிட மாடல்.. அதற்கு நேர் எதிரானது தான் ஆரிய மாடல்.

     ஆர்எஸ்எஸ் மாடல்

    ஆர்எஸ்எஸ் மாடல்

    ஜாதி இருக்க வேண்டும், வருண் தர்மம் காப்பாற்றப்பட வேண்டும்.. ஆண், பெண் சமம் அல்ல.. பெண்கள் அடுப்படியில் இருக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் மாடல்.. இதை மாற்றுவது தான் திராவிட மாடல். 8 ஆண்டுகள் பிரதமர் மோடி ஆட்சியிலும், அதற்கு முந்தைய ஆட்சியிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டம் கிடப்பில் இருக்கிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் 50% இட ஒதுக்கீடு திமுக அரசு வழங்கியுள்ளது.

     ஆதீனம் விவகாரம்

    ஆதீனம் விவகாரம்

    கல்லூரி படிக்கும் பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுத்துப் படிக்க வைப்பது தான் திராவிட மாடல். திராவிட மாடலை எதிர்த்தால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். யானை கழுத்தில் மாலை போடப்பட்டுள்ளது. யானை கழுத்தில் மாலை போட்டால் அதற்கு என்னவென்றே தெரியாது. திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஆதினம் இல்லை. ஏனெனில் குறிப்பிட்ட சாதியினரைத் தவிர மற்றவர்கள் சந்நியாசியாக முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. அந்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்தினால் எந்த ஆதினமும் இருக்க முடியாது. சந்நியாசி, துறவியர்கள் எல்லாம் பேச முடியாது.

     திமுக பதுங்காது பாயும்

    திமுக பதுங்காது பாயும்

    சங்கராச்சாரி மட்டும் தான் இதிலிருந்து தப்புவார். உயர்சாதி மட்டும் தான் இருக்கும். ஆதீனம், தான் மேலே நின்று கொண்டிருக்கிற கிளையின் அடிமரத்தை வெட்டுகிறார். அதிமுக,பாஜக இடையே யார் ஆளும் கட்சியாக வர வேண்டும் என்ற சண்டை இல்லை, யார் எதிர்க்கட்சியாக வருவதில் தான் சண்டை. முதல் எதிர்க்கட்சியா, இரண்டாவது எதிர்க்கட்சியா என்பதில் தான் சண்டை. இதன் மூலம் அவர்கள் எப்போதும் ஆளும் கட்சியாக வர முடியாது தெரிகிறது. திமுக ஒருபோதும் பின்வாங்காது. புலி பின்வாங்குவது பாய்வதற்காகவே என்பது புலியைப் பற்றித் தெரிந்தவர்கள் மட்டுமே தெரியும், புலியைப் பற்றித் தெரியாத புண்ணாக்ககளுக்கு புரியாது!" எனக் கூறினார்.

    English summary
    DK chief K. Veeramani praises DMK govt for providing welfare for people: (மதுரை ஆதீனம் விவகாரம் குறித்து திராவிட கழக தலைவர் கி வீரமணி) K. Veeramani explains about aadheenam issue in tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X