Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடனை திருப்பி கேட்டதால் அரிவாளுடன் நடுரோட்டில் விரட்டிய திமுக கவுன்சிலர் கணவர்- திருச்சி அருகே ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறு தொடர்பாக பட்ட பகலில் அரிவாளால் வெட்ட துரத்திச் சென்ற திமுக கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    DMK Councilor கணவர் அரிவோளோடு விரட்டிய சம்பவம் | Viral Video

    திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியம் தத்தமங்கலம் திமுக ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் நித்தியா. இவரது கணவரான வெற்றிச்செல்வன் என்பவர், கன்னியாபட்டியில் டாஸ்மாக் பார் ஒன்றை நடத்தி வருகிறார்.

     கடனை திருப்பிக் கேட்டதால் மிரட்டல்

    கடனை திருப்பிக் கேட்டதால் மிரட்டல்

    வெற்றிச்செல்வன் தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம், 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை குணசேகரன் பலமுறை கேட்டும் வெற்றிச்செல்வன் தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டு குணசேகரன் வெற்றிச்செல்வன் வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது விரைவில் பணத்தை கொடுப்பதாக கூறிவிட்டு தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் பணம் கேட்டவர்களை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

     அரிவாளால் வெட்ட முயற்சி

    அரிவாளால் வெட்ட முயற்சி

    இதை ஆதாரபூர்வமாக பதிவுச் செய்ய நினைத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள், மீண்டும் வெற்றிச்செல்வன் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். அப்போது, குடிபோதையில் இருந்த வெற்றிச்செல்வனிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு, குணசேகரனின் சகோதரர்களை ஓட ஓட விரட்டி, அவர்களை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கவுன்சிலரும், மனைவையுமான நித்தியா ஆகியோர் வெற்றிச்செல்வனை தடுக்க முயன்ற போதும் அதனை காதில் வாங்காத வெற்றிச்செல்வன், குணசேகரனை ஆவேசமாக துரத்தினர். அச்சமடைந்த குணசேகரன் சகோதரர்கள் அருகில் இருந்த சாலையில் தப்பியோடினர்.

     போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பட்டப்பகலில் அரிவாளுடன் விரட்டி வெட்ட முயன்ற வெற்றிச் செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     சமூக வலைத்தளங்களில் பரவல்

    சமூக வலைத்தளங்களில் பரவல்

    இதற்கிடையே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெற்றிச்செல்வன் அரிவாளால் வெட்ட துரத்தும் காட்சிகளை, குணசேகரன் தரப்பு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆளுங்கட்சி கவுன்சிலரின் கணவர் பணம் கொடுங்கல் வாங்கல் பிரச்சனைக்காக, பட்டப்பகலில் அரிவாளை கொண்டு தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+