ஜெயிச்சா இப்படி ஜெயிக்கனும்... திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் உயரப்பறக்கும் திமுக கொடி..!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வெற்றிமுகத்தில் உள்ளது.
திமுகவின் கோட்டை திருச்சி மாவட்டம் என்பதை அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த சட்டமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இதனிடையே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கடின உழைப்பும் இந்த வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது.

திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தை பற்றி கருணாநிதி குறிப்பிடுகையில் ''தீரர்களின் கோட்டம்'' என்றுக் கூறுவார். திமுகவுக்கு திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்த பல்வேறு நிகழ்வுகள் திருச்சி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளன. அந்தவகையில் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திருச்சி சிறுகனூரில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட மாநாடு திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

எந்தெந்த தொகுதிகள்
லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி, என திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிமுகத்தில் இருக்கிறார்கள். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத வகையில் வலிமையான வேட்பாளர்களை திருச்சி மாவட்டத்தில் திமுக தலைமை களமிறக்கியிருந்தது.

கடின உழைப்பு
இதனிடையே, மணப்பாறை தொகுதியை பற்றி கூற வேண்டும் என்றால் அது தொடர்ந்து அதிமுக வசமே இருந்து வந்தது. 1996-ல் ஒரேயொரு முறை மட்டுமே அங்கு திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவிடம் இருந்து மணப்பாறை தொகுதி திமுக வசம் செல்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை விட பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ். இதேபோல் திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், திருச்சி மேற்கில் கே.என்.நேரு. என திமுக வேட்பாளர்கள் அனைவரும் விறுவிறுவென லீடிங்கில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications