நாங்க என்ன அவங்களை போல ஜடமா.. என்ன செய்வோம்னு தெரியும்.. அதிமுக எம்பிக்கள் மீது ஸ்டாலின் தாக்கு
திருச்சி: "நாங்க என்ன அவங்களை போல ஜடமா? நாடாளுமன்றம் கூடும்போது நாங்க என்ன செய்வோம்னு தெரியும்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக எம்பிக்கள் குறித்து விமர்சித்து பேசினார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்ட கலைஞர் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்:
மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நான் மட்டும் காரணம் அல்ல, ஒவ்வொரு திமுக தொண்டரின் உழைப்பும்தான், இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது.

ஆனால் திமுகவின் வெற்றியை அதிமுக கொச்சைப்படுத்தி வருகிறது. அப்படியென்றால், மோடி வெற்றி பெற்றது பொய் பிரசாரமா? 37 எம்பிக்களை வைத்துகொண்டு திமுக என்ன செய்ய போகிறது? என்ன பயன் என்கிறார்கள்? அதிமுக எம்பிக்களைபோல் திமுக எம்பிக்கள் என்ன ஜடமா? அப்படி ஜடமாக இருக்க மாட்டார்கள். நாடாளுமன்றம் கூடும்போது என்ன செய்வோம் என்று தெரியும்.
எட்டு வழிச்சாலையில் ஏன் எடப்பாடி இவ்வளவு அக்கறை காட்டுகிறார்? மேட்டூரில் 8 வருஷமா காவிரிநீர் உரிய காலத்தில் திறந்துவிடப்படவில்லையே.. இதைபற்றி அவருக்கு ஏதாவது கவலை உண்டா? காவிரி நீரை பற்றி கேட்டால் மேகதாது பற்றி பதில் சொல்கிறார்கள்.
அது காவிரி ஆணையமா, கர்நாடகா ஆணையமா? எட்டு வழிச்சாலையில் காட்டும் அவசரத்தை ஏன் காவிரி நீர் விஷயத்தில் காட்டவில்லை? ஏன் என்றால், இந்த திட்டம் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்" என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications