திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாலமனை பார்த்ததுமே டக்கென காரை நிறுத்திய நேரு.. மணப்பாறை ரோட்டில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!

மாற்று திறனாளிக்கு அமைச்சர் கேஎன் நேரு உதவியுள்ளார்

Google Oneindia Tamil News

திருச்சி: மணப்பாறை அருகே சாலையோரம் தவழ்ந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளிக்கு, அமைச்சர் கே.என்.நேரு உதவி செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது கொரோனாவின் 2வது பரவல் தலைதூக்கி உள்ளது.. இதனால் ஒன்றிணைந்து கொரோனாவை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

அப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலிஅப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலி

அந்த வகையில், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், என மொத்த பேரும் அவரவர் தொகுதியில் தீயாய் இறங்கி தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மணப்பாறை

மணப்பாறை

அந்த வகையில், மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில், அமைச்சர் கேஎன் நேருவும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்... அங்கிருந்த டாக்டர்கள், மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, உடையாபட்டியில் திமுக பிரமுகர் இறந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

 மாற்று திறனாளி

மாற்று திறனாளி

அப்போது, வெயில் கொளுத்தியது.. உடையாபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, ரோட்டோரம் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர், தவழ்ந்து தவழ்ந்து சென்று கொண்டிருந்தார்... சுட்டெரிக்கும் வெயிலில் கை, கால்களை ஊன்றி தவழ்ந்து செல்வதை பார்த்த அமைச்சர் நேரு, டக்கென காரை நிறுத்தி விட்டார்.. அந்த இளைஞரிடம் சென்று, "மாற்றுத் திறனாளிக்கான வண்டி இருக்கா?"என்று கேட்டார்.

 மாற்றுதிறனாளி வண்டி

மாற்றுதிறனாளி வண்டி

தனக்கு வண்டி இல்லை என்று இளைஞர் சொன்னார்.. இதையடுத்து, அவருக்கு தேவையான உதவிகள் வேறு என்னென்ன என்று நேரு கேட்டறிந்தார்.. அனைத்தையும் செய்து தருகிறேன் என்று இளைஞருக்கு உறுதி சொன்னார்.. பிறகு, காரில் வைத்திருந்த பிஸ்கட்டை எடுத்து வந்து இளைஞருக்கு தந்துவிட்டு, கிளம்பி சென்றார்... சம்பந்தப்பட்ட இளைஞர் அதே பகுதியை சேர்ந்தவராம்.. பெயர் சாலமன்..!

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

அமைச்சர் ஒருவர் திடீரென காரை விட்டு இறங்கி வந்து இளைஞரிடம் பேசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. இது சோஷியல் மீடியாவிலும் பகிரப்பட்டு, பலரும் அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.. விரைவில் சாலமனுக்கு மாற்று திறனாளிகளுக்கான வண்டி கிடைத்துவிடும் என்கிறார்கள்!

English summary
DMK Minister KN Nehru helped the disabled youth near Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X