திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உமா மகேஸ்வரியை கொல்லவே இல்லை என்று சாதித்த சீனியம்மாள்.. கணவருடன் சேர்த்து கைது!

உமா மகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    'கொலை செய்துட்டு, குளிச்சுட்டுதான் கிளம்புனேன், நான் ஒரு சைக்கோ..' ஷாக் தந்த கார்த்திகேயன்

    திருச்சி: "நான் ஏன் அந்தம்மாவை கொல்ல போறேன்" என்று தெள்ளத் தெளிவாக சொன்ன திமுக பிரமுகர் சீனியம்மாளை, முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருடைய கணவன் சன்னாசியையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை தந்துள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், வீட்டு வேலைக்கார பெண் என 3 பேரும் கொல்லப்பட்டனர். நடந்த இந்த கொலையே ரொம்ப பயங்கரமாக இருந்தது.

    உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்துகள். ஆளுக்கு ஒரு ரூமில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

    மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடிக்க புதிய ஆப்.. களமிறங்கிய அதிமுக.. விசில் ரிப்போர்ட்டர்!மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டுபிடிக்க புதிய ஆப்.. களமிறங்கிய அதிமுக.. விசில் ரிப்போர்ட்டர்!

    சீனியம்மாள்

    சீனியம்மாள்

    இது சம்பந்தமான விசாரணையில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் பெயர் துவக்கத்திலேயே அடிபட ஆரம்பித்தது. ஆனால் அதனை அவர் உடனடியாக மறுத்தார். "உமா மகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர், நான் மாநில துணை செயலாளர்.. அவருகிட்ட போய் நான் நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. அதனால உண்மையான குற்றவாளியை மட்டும் தப்ப விட்டுடாதீங்க" என்று கூறினார்.

    கைது

    கைது

    ஆனால் இப்படி சீனியம்மாள் சொல்லிய மறுநாளே, வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது மகன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் 3 பேரையும் கொன்றது தான் தான் என்று சொல்லி இருந்தார்.

    ரத்தக்கறைகள்

    ரத்தக்கறைகள்

    "முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியால் என் அம்மா சீனியம்மாள் அரசியலில் வளரவே முடியாமல் போய்விட்டது. எங்க அம்மா வாழ்க்கையே அழிந்து போய்விட்டது.. எனக்கு சின்ன வயசில் இருந்தே உமா மகேஸ்வரியை தீர்த்து கட்டணும்னு வெறி. அதுக்குதான் அவங்களை கொலை செய்தேன். 3 பேரும் செத்துட்டாங்க.. வீடு முழுக்க தடயங்களை அழித்தேன்.. என் உடம்பில் ரத்தக்கறைகள் இருந்தது. அதனால் நான் பாத்ரூம் போய் குளிச்சுட்டுதான் அங்கிருந்து கிளம்பினேன்.. போற வழியில்தான் என் அம்மாவுக்கு தகவல் சொன்னேன். அவங்க பதறிட்டாங்க" என்று வாக்குமூலம் தந்திருந்தார்.

    கைது

    கைது

    இதனிடையே, இது சம்பந்தமாக அடுத்து வேறு எந்த தகவலும் பெரிய அளவில் வெளிவரவே இல்லை. ஆனாலும் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை அதிதீவிரமாகவே விசாரித்து வந்தனர். இந்நிலையில், உமாமகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கணவர் சன்னாசியையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருப்பம்

    திருப்பம்

    "என் அம்மாவுக்கு இந்த கொலை பற்றி தெரியாது என்று கார்த்திகேயன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதேபோல, நான் ஏன் அந்தம்மாவை கொல்ல போறேன்" என்றும் கூறியிருந்த நிலையில், சீனியம்மாள் கணவருடன் கைதாகி உள்ளது பெரிய திருப்பத்தை இந்த வழக்கில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் திருச்சி அரசியல் வட்டாரம் பெரும் பரபரப்பில் உள்ளது.

    English summary
    dmk person seeniammal arrested including her husband in trichy ex mayor uma maheswari murder case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X