Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடே அடிக்கடி உச்சரிக்கும் பெயர்.. யார் இந்த திருச்சி ராமஜெயம்? எப்படி இருந்தவர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மூளையாக செயல்பட்ட அவரது இளைய தம்பி மறைந்த கே.என்.ராமஜெயத்தை பற்றித் தான் இன்றைய Throwback storiesல் பார்க்க இருக்கிறோம்.

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவு, கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அலுவலகத்திலிருந்து பறந்த போன் கால்கள், அதிரடியான நடவடிக்கைகள், என கே.என்.ராமஜெயத்தை பற்றி ஏராளமாக கூறலாம்.

கே.என்.ராமஜெயம் மறைந்து 11ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் அவரால் பயன்பெற்றவர்கள் அவரை மறக்காமல் திருச்சி மாநகரம் முழுவதும் நேற்று அவரது 11வது நினைவுநாளையொட்டி நினைவஞ்சலி போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

லால்குடி அருகே

லால்குடி அருகே

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் கிராமம் தான் கே.என்.ராமஜெயத்தின் பூர்விக கிராமம். தந்தை பெயர் நாராயணசாமி ரெட்டியார். தனது கிராமத்தின் பெயரை குறிக்கும் வகையில் அதன் முதல் எழுத்தான கே வையும், தந்தை பெயரின் முதல் எழுத்தான என் ஐயும் சேர்த்து கே.என். என்ற இன்ஷியலை வைத்துக்கொண்டார்கள் அமைச்சர் நேருவும் அவரது சகோதரர்களும். அமைச்சர் கே.என்.நேரு குடும்பத்திற்கு மூத்த பிள்ளை என்பதால் அவரது தம்பிகளான கே.என்.ராமஜெயம், கே.என்.மணிவண்ணன், கே.என்.ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் அண்ணன் சொல்லை வேத வாக்காக ஏற்று செயல்படக் கூடியவர்கள்.

கே.என்.ராமஜெயம்

கே.என்.ராமஜெயம்

சரி நமது Throwback stories வரிசையில் கே.என்.ராமஜெயத்தை பற்றி பார்க்கலாம். அமைச்சர் கே.என்.நேருவின் மூளையாக அவரது நிழலாக செயல்பட்டவர் கே.என்.ராமஜெயம். 5 முதல் 7 மொழிகள் வரை சரளமாக பேசக்கூடியவர். எந்த ஒரு விவகாரத்தையும் மிகவும் நுணுக்கமாக அணுகக் கூடியவர். எம்.பி.ஏ.வில் தங்கப்பதக்கம் வென்ற இவர் சிறுவயது முதலே படிப்பில் கெட்டிக்காரர். ஆரம்பக் காலங்களில் போர்வெல் போடும் ஒப்பந்தப் பணிகளை தமிழகம் கடந்து பல்வேறு மாநிலங்களில் எடுத்துச் செய்தவர் பிற்காலத்தில் நாடுகள் கடந்தும் தனது தொழில் சாம்ராஜ்யத்தை பரப்பியவர்.

குவிந்த கூட்டம்

குவிந்த கூட்டம்

இதனால் தான் இவரை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் இன்றளவும் எம்.டி. என்று அழைக்கிறார்கள். உள்ளூர் முதல் உலக அரசியல் வரை ஆழமாக பேசக் கூடியவர் கே.என்.ராமஜெயம். மே, ஜூன் மாதங்களில் பள்ளிக் கட்டணம், கல்லூரி கல்விக்கட்டணம் உதவிக் கேட்டு கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டோரும் அவரது தில்லை நகர் அலுவலகத்தில் குவிவார்கள். கல்விக் கட்டணம் கட்ட உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தாராளம் காட்டியவர் கே.என்.ராமஜெயம். இதேபோல் கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் என ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கும் நன்கொடையை வாரி வழங்கியவர்.

அமைச்சர் நேரு

அமைச்சர் நேரு

அமைச்சர் நேருவை பார்ப்பதை விட ராமஜெயத்தை பார்த்தால் தான் காரியம் நடக்கும் எனக் கருதி அவர் காலை மாலை நேரத்தில் இறகு பந்தாட்டம் விளையாடும் இடத்திற்கே கட்சிக்காரர்கள் குவிந்த நிகழ்வெல்லாம் நடந்துள்ளது. அந்தளவுக்கு முடிவுகளை உடனுக்குடன் எடுக்கக் கூடியவர். தனது அண்ணன் நேருவுக்கு திரைமறைவு அரசியலில் எல்லாமுமாக இருந்த இவர் ஒரு கட்டத்தில் நேரடி அரசியலில் குதிக்க விரும்பினார். குறிப்பாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு போட்டியிட விருப்பப்பட்டார்.

பெரம்பலூரில் நெப்போலியன்

பெரம்பலூரில் நெப்போலியன்

அந்த தருணம் பார்த்து நெப்போலியனை அங்கே நிறுத்தி கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்தார் கருணாநிதி. இதனிடையே கேர் என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளை கட்டத் தொடங்கிய ராமஜெயம் வகுப்பறைகளில் புதுமைகளை கொண்டு வந்தார். உலகளாவிய அளவில் தனது கல்வி நிறுவனங்களை உயர்த்த விருப்பப்பட்ட இவர் துரதிர்ஷ்டவசமாக கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

நேரு அழுகை

நேரு அழுகை

கே.என்.ராமஜெயத்தின் மறைவை இன்றளவும் ஏற்க முடியாமல் அவ்வப்போது கண்ணீர் விட்டு கதறி அழுதுவிடுகிறார் அமைச்சர் கே.என்.நேரு. பார்ப்பதற்கு கம்பீரமான நேருவையே நினைவுகளால கலங்க வைத்துவிடுகிறார் ராமஜெயம். இவர் மறைந்து 11 ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையிலும் திருச்சி மாநகரம் முழுவதும் அவருக்கு நினைவஞ்சலி போஸ்ட்கர்கள் ஒட்டி அவரால் பலன் பெற்றவர்கள் கவனம் ஈர்த்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+