திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதயநிதியை தொடர்ந்து இதோ வந்துட்டார்ல மாப்பிள்ளையும்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Udhayanidhi stalin: டிகேஎஸ் இளங்கோவன் சொல்வதை பார்த்தால், உதயநிதிக்கு பதவி உறுதியா?- வீடியோ

    லால்குடி: திமுகவில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியைத் தொடர்ந்து அவரது மருமகன் சபரீசனும் வெளிப்படையான அரசியலில் களமிறக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

    திமுகவில் ஸ்டாலினின் அரசியல் நகர்வுகளை முழுமையாக இயக்கி வருபவர் மருமகன் சபரீசன். உட்கட்சி விவகாரமானாலும் அகில இந்திய விவகாரமானாலும் சபரீசனை முன்வைத்தே அனைத்தையும் செய்து வருகிறார் ஸ்டாலின்.

    இதற்காகவே டெல்லியில் சபரீசனுக்கு தனி அலுவலகமே அமைத்தும் கொடுக்கப்பட்டது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியாவை ஸ்டாலின் சந்திக்க சென்ற போது சபரீசனையும் நடுநாயகமாக நிற்க வைத்து போட்டோக்களை ரிலீஸ் செய்தனர்.

    "பாஜக ஒழிக".. தமிழிசையின் மகன் எழுப்பிய கோஷம்.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    உதயநிதிக்கு பதவி

    உதயநிதிக்கு பதவி

    திமுகவின் டெல்லி முகம் கனிமொழி அல்ல. இனி சபரீசன்தான் என்கிற அறிவிப்பாகத்தான் அது பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு உதயநிதிக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி தரக் கோரி மாவட்டங்களில் கட்சி கூட்டங்களில் தீர்மானம் போட்டனர். அதுவும் திமுகவின் லோக்சபா தேர்தல் அமோக வெற்றிக்கு காரணமே உதயநிதியின் உழைப்புதான் என்றெல்லாம் ஓவராக பில்டப் கொடுக்கப்பட்டது. உண்மைக்குப் புறம்பான வரலாறை திமுக தலைமை எழுதலாமா என்கிற விமர்சனங்களும் இதனால் எழுந்தன.

    அன்பிலார் நூற்றாண்டு

    அன்பிலார் நூற்றாண்டு

    இந்த நிலையில் திமுகவின் இன்னொரு குடும்ப வாரிசான உதயநிதியின் நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் தாத்தா அன்பில் தர்மலிங்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார். அந்த கிராமத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சபரீசன் அரங்கேற்றம்

    சபரீசன் அரங்கேற்றம்

    இந்நிகழ்ச்சியில் ஸ்டாலினுடன் உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோரும் பங்கேற்றனர். மேடையில் சபரீசனுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. உதயநிதியைப் போலவே மருமகன் சபரீசனுக்கும் கட்சியில் வெளிப்படையாகவே முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த விழா இருந்தது.

    ராஜ்யசபா எம்பியா?

    ராஜ்யசபா எம்பியா?

    உதயநிதிக்கு ஒரு இளைஞரணியைப் போல சபரீசனுக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் கொடுத்து ‘அழகு'பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதைத்தான் திமுகவை ஆட்டுவிக்கும் கிச்சன் கேபினட் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.

    English summary
    DMK to give importance to Sabareesan?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X