"45 ஆண்டுகளுக்கு மேலாக சமூக பணிகள்.." துபாய் ஈமான் அமைப்பிற்கு துபாய் இந்திய துணை தூதர் பாராட்டு
திருச்சி: சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாகத் துபாய் ஈமான் அமைப்பு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்குத் துபாய் இந்தியத் துணை தூதர் பாராட்டு தெரிவித்தார். துபாய் ஈமான் அமைப்பு 1976ல் இருந்து துபாயில் சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. படிப்பு வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐக்கிய அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் அதிகம் செல்கிறார்கள். குறிப்பாக ஐக்கிய அமீரகத்தில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர்.
இதற்கிடையே துபாய் இந்தியத் துணை தூதர் சதீஷ் குமார் சிவனை ஈமான் பொருளாளரும் ,பிளாக் துலிப் நிறுவனத்தின் சேர்மனுமான யஹ்யா, பிளாக் துளிப் இம்ரான் மற்றும் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது துபாய் இந்தியத் துணை தூதரகத்தின் பல்வேறு சிறப்பான சேவைகளுக்கு ஈமான் சார்பில் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஈமான் பொருளாளர் யஹ்யா இந்தியத் துணை தூதரிடம் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், துபாய் ஈமான் அமைப்பு 1976ல் இருந்து துபாயில் சமூக நலன் பணிகளில் ஈமான் அமைப்பு ஈடுபட்டு வருவதையும் மேலும் சமூகப் பணிகளுக்குத் துபாய் ஈமான் அமைப்பு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது துபாய் ஈமான் அமைப்பின் சமூக நலப் பணிகளுக்கு இந்தியத் துணை தூதர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications