ரோடு பேரு நல்லாதானே இருக்கு.. ஜெயக்குமாருக்கு குழப்பம் வரத்தான் செய்யும்.. அமைச்சர் எ.வ.வேலு
திருச்சி: ஈசிஆர் சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்ற பெயர் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படாது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தான் குழப்பம் என பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பொதுப் பணித் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ வேலு பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர்
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவரிடம் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை 14 கி.மீ நீண்ட நாள் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இதற்கு 2ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். NHAI தான் இதை செய்ய முடியும்.

திருச்சி
திருச்சியில் 1.6 கிலோ மீட்டர் : அண்ணா சிலை முதல் மல்லாச்சிபுரம் வரை உயர்மட்ட சாலை - அதே போல் தலைமை தபால் நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் மதிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது - இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவக்கப்படும்.

பழைய சாலைகள்
பழைய சாலைகளை அப்புறப்படுத்தி தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது - மில்லிங் செய்யாமல் ரோடு போடப்படுகிறது என்று எனக்கே புகார் வந்தது - ஆனால் கண்டிப்பாக மில்லிங் முறை செய்து தான் சாலைகள் அமைக்கப்படுகிறது. 6 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகள் வாங்கி வைத்து வருகிறோம் - உயராமான மரக்கன்றுகள் தான் சாலையில் வைக்கப்பட்டு வருகிறது.

டெண்டர் பணிகள்
டெண்டர் பணிகள் முடிக்காமலேயே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகிறது என்ற கேள்விக்கு அமைச்சர் எவ வேலு கூறுகையில் கண்டிப்பாக இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எனக்கு வந்துள்ளது.

பாரபட்சம
அதிமுக, திமுக என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுபவார்கள் என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று மாற்றுவது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிற ஜெயக்குமாரின் கருத்து குறித்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில் நெடுஞ்சாலையை தனித் துறையாக்கியவர் கருணாநிதி.

கல்லும் மண்ணும்
கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை சரி செய்து, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி. அதனால் அந்த சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டுள்ளோம். இந்த பெயரால் தமிழக மக்களுக்கு எந்த குழப்பமும் வராது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மட்டும் தான் குழப்பம் வரும் என்றார்.
-
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications