நேற்று சென்னை.. இன்று திருச்சி.. 4 நகைக் கடைகளுக்குள் நுழைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்
திருச்சி: திருச்சியில் நகைக் கடைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி போஸ் சாலையில் பூக்கடை அருகில் உள்ள மோகன் லால் நகைக்கடை ஒன்றில் சோதனை செய்வதற்காக அமலாக்கத் துறையினர் சென்றனர். மொத்தம் 5 அதிகாரிகள் அந்த நகைக்கடையில் சோதனை நடத்தினர்.

இதேபோல் சென்னை பாரிமுனையில் மற்றொரு நகைக்கடையில் சோதனை செய்வதற்காக அதிகாரிகள் சென்றனர். மொத்தம் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்பட 7 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். சென்னை பாரிமுனையில் உள்ள 2 நகைக்கடையில் 10 அதிகாரிகள் இரண்டு குழுவாக பிரிந்து சோதனை நடத்தினர்.
அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத் துறையினருடன் தமிழக போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி ஜாபர்ஜா தெரு, பெரிய கடை வீதி ஆகியவற்றில் உள்ள 4 நகைக் கடைகளுக்கு 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் 10-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுடன் கடைக்கு வந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications