எதிரிகள் புதிய வழிகளில் மிரட்டி பார்க்கிறார்கள்.. தமிழ்நாட்டில் எடுபடாது.. முதல்வர் ஸ்டாலின்
திருச்சி: எதிரிகள் தற்போது புதிய வழிகளில் மிரட்டி பார்க்கிறார்கள் என்றும், வருமான வரி, அமலாக்கத்துறையை அடுத்து தற்போது எஸ்.ஐ.ஆரை வைத்து மிரட்டுகிறார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளனர். டெல்லியில் இருக்கும் பிக் பாசுக்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம் சாமி போட்டு தான் ஆக வேண்டும்' என்றும் கூறினார்.
திருச்சியில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் இன்று பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், திமுகவை அழிக்க எதிரிகள் புதிய வழிகளில் முயற்சிப்பதாக கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் இது நடக்காது என்றும் அவர் கூறினார். ஸ்டாலின் பேசியதாவது:-

75 ஆண்டுகளாக திமுக கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஓய்வோ, தொய்வோ இல்லாமல் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்து திமுகவை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது.
திமுகவை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு நிறைவேறாது. புதுப்புது உக்திகளோடு திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள். எதிரிகள் தற்போது புதிய வழிகளில் மிரட்டி பார்க்கிறார்கள். வருமான வரி, அமலாக்கத்துறையை அடுத்து தற்போது எஸ்.ஐ.ஆரை வைத்து மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் அது எடுபடாது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வெளிப்படையாக எதிர்க்க முடியாத நிலையில் உள்ளனர். டெல்லியில் இருக்கும் பிக் பாசுக்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம் சாமி போட்டு தான் ஆகவேண்டும்.
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் தொடர்பாக அதிமுக முன்பே வழக்கு தொடராமல் இப்போது தொடர்வது ஏன்?, மக்கள் மீது அக்கறை இருந்தால் எஸ்.ஐ.ஆர் குறித்து முன்பே வழக்கு போட்டிருக்கலாமே.. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications