இந்த அநியாயத்தை பாருங்க.. ஸ்பா பெயரில் பாலியல் தொழில்.. சிக்கிய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி
திருச்சி: திருச்சியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வருகிறது THe Shine என்ற ஸ்பா. இங்கு ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாக திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொறுப்பு ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் அதிரடியாக அங்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் தி ஷைன் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடத்தப்படுவதை போலீஸார் அறிந்தனர்.
மேலும் இதை லட்சுமி தேவி என்பவர் மேலாளராக இருப்பது போல் இருந்து விபச்சாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு இரு பெண்கள் இருந்தனர். அங்கிருந்த அறைகளில் சோதனை செய்த போது இந்த ஸ்பா சென்டர் உரிமமே இல்லாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த இரு பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலாளர் லட்சுமி தேவியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்பாவின் உரிமையாளர் யார் என்பது தெரியவந்ததது. திருச்சி வயலூரை சேர்ந்த செந்தில் என்பவர்தான் இதன் உரிமையாளர் என்றும் அவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி என்றும் தெரியவந்தது.
மேலும் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக செந்தில் இருந்து வருவதும் தெரியவந்தது. இவர் விஜய் ரசிகர். விஜய்யை நேரில் சந்தித்து பனையூர் நிர்வாகிகள் கூட்டத்தின் போது புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அத்துடன் தனது திருமணத்திற்கு விஜய் சங்கீதாவின் புகைப்படத்தையும் சேர்த்து போஸ்டர் அடித்திருந்தார். அது போல் கையில் தளபதி என டாட்டூ குத்தியுள்ளார். தளபதி விஜய் மஹால் என்ற திருமண மண்டபத்தையும் நடத்தி வருகிறார். இதை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தான் திறந்து வைத்தார்.
விஜய் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அல்லது 2026 இல் சட்டசபை தேர்தலில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 234 தொகுதிகளிலும் நலத்திட்டங்களை செய்து வருகிறார். அப்படியிருக்கும் போது விஜய்யின் பெயரை கெடுக்கும் வகையில் ஒரு கூடை தக்காளியில் ஒரு தக்காளி அழுகி இருந்தால் என்ன நடக்கும்? இன்னொரு விஷயம் , கட்சியே இன்னும் தொடங்கவில்லை. அதற்கு ஸ்பா பெயரில் பாலியல் தொழில். கட்சி தொடங்கினால் என்னவெல்லாம் நடக்குமோ?












Click it and Unblock the Notifications