Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

300 ரூபாய் டூ 6 கோடிக்கு அதிபதி..! ஒரே ஒரு புத்தகம்.. ஓவர் நைட்டில் ஃபுல் சேஞ்ச்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: கடந்த 1997இல் தினம் 10 ரூபாய் சம்பளம் பெற்ற ஒருவர் தனது 42 வயதிற்குள் பல முதலீட்டு முயற்சிகளில் ஈடுபட்டு இன்றைக்கு 6 கோடி ரூபாய்க்கு அதிபதியாக மாறி இருக்கிறார். எப்படி நடந்தது இந்த மேஜிக்? அவர் மிகவிரிவாக இது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமி பணம் பற்றி ஒரு புத்தகம் பற்றிச் சொன்னதும் பலரும் அடித்துப் பிடித்துக் கொண்டு பல ஆயிரம் பேர் அதை வாங்கினார்கள். வாங்கியவர்களின் எத்தனைப் பேர் அதை முழுமையாகப் படித்திருப்பார்கள் என்பது தெரியாது. அதனால் எத்தனை பணக்காரர்கள் உருவாகப் போகிறார்கள் என்றும் தெரியாது.

trichy srirangam

ஆனால், 10 வகுப்பு மட்டுமே படித்த 300 ரூபாய் சம்பளத்திலிருந்த மதுரை வீரன் என்பவர் வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கே போய் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு இன்றைக்கு தன் முதலீட்டைப் பெருக்குவதன் மூலம் 6 கோடிக்கு அதிபதியாக மாறி இருக்கிறார். அதற்குக் காரணம் 'பணம் புரிந்தவன்' என்ற புத்தகம் தான் என்கிறார் அவர். அதைப் பழையப் புத்தகக் கடையில் வங்கிய இவர், தனது முதலீட்டு அறிவை வளர்த்துக் கொண்டு முன்னேறி இருக்கிறார். படித்தது பத்தாம் வகுப்புதான். வாங்கிய முதல் வருமானம் 10 ரூபாய். எப்படி நடந்தது இந்த மாற்றம்.

மதுரை வீரன் ஒரு ஆங்கில யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் மட்டும் 1.5 மில்லியன் பேர் கடந்த சில நாட்களில் பார்த்திருக்கிறார்கள். யார் இந்த மதுரைவீரன், "பிறந்து, வளர்ந்தது எல்லாம் திருச்சி பக்கம் இருக்கும் ஸ்ரீரங்கம்தான். இப்போது எனக்கு 42 வயதாகிறது. நான் 1983இல் பிறந்தேன். அதன்பின் 1988இல் என் அப்பா மறைந்தார். வெளிப்படையாக சொன்னால், அப்பா இறந்த பிறகு நடுத்தெருவில்தான் குடும்பம் நின்றது. அம்மா, நான், உடன்பிறந்தவர்கள் யாருக்கும் ஒரு வேலையும் இல்லை.

அடித்தட்டு குடும்ப பின்புலம்தான். பெரிய வசதி வேண்டாம், அடிப்படை வசதியே இல்லை என்றுதான் சொல்வேன். 9ஆம் வகுப்பு கஷ்டப்பட்டுத்தான் படித்தேன். பத்தாம் வகுப்பு நிறையக் கஷ்டப்பட்டுப் படித்தேன். அதற்கு மேல் படிக்க வைக்க முடியாது என்று அம்மா கைவிரித்துவிட்டார். திருச்சியில் ஒரு ஒர்க் ஷாப் இருந்தது. அதில் போய் வேலை பார்க்கச் சொன்னார்,

எனக்குப் படிப்பு பெரியதாக வரவில்லை. ஒரு ஆவரேஜ் ஸ்டூடண்ட் தான். அம்மா சொன்னதும் பட்டறையில் போய் வேலைக்கு 1997இல் வேலைக்குச் சேர்ந்தேன். அன்றைக்கு என் கூலி ஒரு நாளைக்கு 10 ரூபாய். காலை 8 மணிக்குப் போவேன். இரவு 7 மணி வரை வேலை இருக்கும். அதற்குப் பிறகு இரவு நடந்தே திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் போவேன். இந்தப் பட்டறையில் ஒன்றரை வருடம் வேலை பார்த்தேன்.

ஒரு நாள் டீ வாங்கிக் கொண்டு வரும்போது ஆர்.சி.எஸ். லாரி முதலாளி என்னைப் பார்த்துவிட்டு, 'இந்தச் சின்ன வயதில் படிக்காமல் ஏன் வேலை செய்யுறே?' என்று சொல்லி ஸ்கூலுக்குப் படிக்கப் போகச் சொன்னார். நான் வீட்டு வருமையை விளக்கிச் சொன்னதும், ஒரு ஆளுக்கு 5 ஆயிரம் போட்டு என்னை அரசு பாலிடெக்னிக்கில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிக்கச் சேர்த்துவிட்டார்கள். 3 ஆண்டுகள் படிப்பு முடிந்ததும், அந்த லாரி முதலாளியே என்னைச் சென்னையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அங்கு 900 ரூபாய் சம்பளம்.

என் அறை நண்பர்கள் மூலம் பெற்ற அறிவை வைத்து சார்ஜா கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பித்தேன். ஒரு பஜ்ஜி சாப்பிடும் பேப்பரில் வந்த விளம்பரம் பார்த்துப் போட்டேன். 2005இல் கிடைத்தபோது எனக்கு 15 ஆயிரம் சம்பளம். மீண்டும் ஒன்றரை வருடம் கழித்து கத்தார் ஆயில் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். இங்கு இந்திய மதிப்புக்கு 65 ஆயிரம் சம்பளம்.

trichy srirangam

மீண்டும் குவைத் ஆயில் கம்பெனியில் 2010 இல் வேலை மாறினேன். அங்கு 1 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம். 2012இல் ஓமன். இங்கே 1லட்சத்து 50 ஆயிரம் சம்பளம். பிறகு ஈராக்கில் 3 வருடங்கள் வேலை. 2014 என் சம்பளம் 3 லட்சம். மறுபடியும் அபுதாபியில் வேலை. இந்த கம்பெனியில் 2019வரை இருந்தோம். 5 லட்சம் சம்பளம். 2024 மார்ச் மாதம் பின் வேலையை விட்டுவிட்டு இந்தியா வந்துவிட்டேன். இனிமேல் குடும்பத்துடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்து வந்துவிட்டேன்.

2011 வரை வரும் சம்பளத்தைச் சேமித்து திருச்சி பக்கம் இடம் மட்டுமே வாங்கினேன். 2017 டிமேட் அக்கெளண்ட் பற்றிய அறிவே வந்தது. ஒரு பக்கம் பங்குச்சந்தை முதலீடு. மறுபக்கம் நேரடியாக தங்கம் வாங்குவது. 2017இல் முதன்முதலாக மாதம் 10 ஆயிரத்திற்கு சீட்டுப்போட்டு தங்கம் வாங்கினேன். மீண்டு 2018இல் மாதம் 40 ஆயிரம் வீதம் தங்கம் வாங்கினேன். இப்படிப் படிப்படியாக உயர்ந்து 2024இல் மாதம் 2.5 லட்சத்திற்குத் தங்கம் வாங்கத் தொடங்கினேன். இவை அனைத்துமே தங்க நகைக்கடையில் சீட்டுக்கட்டி வாங்கிய தங்க முதலீடு. அப்போது எனக்கு அது மட்டுமே தெரிந்திருந்தது. வேறு பங்கு சந்தை முதலீடுகள் பற்றி எதுவுமே தெரியாது. அதன் மூலம் மட்டுமே எனக்கு 12 லட்சம் சேமிக்க முடிந்தது. இப்படி 2800 கிராம் தங்கம் சேமித்து இருக்கிறேன்.

அதேபோல மறுபக்கம் பங்குச் சந்தையில் டைரக்ட் ஈகியூட்டியாக தங்கம் முதலீடு செய்தேன். அதில் என் முதல் மட்டும் 69 லட்சம் இருக்கிறது. லாபம் பற்றிச் சொல்லவில்லை. மூலதனம் மட்டுமே இது. என் வாழ்க்கையை மாற்றியதே 'பணம் புரிந்தவன்' என்ற புத்தகம்தான். அதைப் படித்த பிறகுதான் பாசிடிவ் கேஷ் ப்ளோ என்பது என்ன என்றே புரிந்தது. அது கொடுத்த அறிவை வைத்துத்தான் The power of compounding என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது என் முதலீட்டின் மதிப்பு 6 கோடி" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+