திண்டுக்கல் டூ சென்னை.. பிரபல நகைக்கடைக்கு போன 10 கோடி தங்கம்.. திருச்சியில் கொள்ளை போனது எப்படி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் குணவத். இவர் சென்னை திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்க கட்டிகளை விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் தங்க கட்டிகளுடன் சென்றார். ஆனால் திருச்சி அருகே காரில் கொண்டு வந்த ரூ.10 கோடி தங்க கட்டிகளை நகைக்கடை மேலாளர் குணவத்தின் கண்களில் 3 பே மிளகாய் பொடி தூவி உள்ளார்கள். பின்னர் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

சென்னை சவுகார்பேட்டையில் பிரபல தங்க நகை கடையில் மேலாளராக 26 வயதாகும் குணவத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்க கட்டிகளை விற்பனை செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் தங்க கட்டிகளுடன் புறப்பட்டுள்ளார். காரில், அவருடன் அதே கடையில் வேலை பார்க்கும் ஊழியர் மகேஷ் ராவல் (24) என்பவரும் சென்றுள்ளார். காரை டிரைவர் பிரதீப் ஜாட் (20) ஓட்டினார்.

Gold bars worth 10 crores stolen from Dindigul-Chennai car near Trichy What happened

10 கிலோ தங்கம்

திண்டுக்கல் சென்ற குணவத், அங்குள்ள ஒரு நகைக்கடையில் குறிப்பிட்ட அளவு தங்க கட்டிகளை கொடுத்தார். பின்னர் மீதமிருந்த சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை குணவத் எடுத்துக்கொண்டு மீண்டும் சென்னைக்கு ஊழியர் மற்றும் டிரைவருடன் திரும்பி வந்து கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் என்ற இடம் அருகே வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக காரை நிறுத்தி, அதில் இருந்த 3 பேரும் கீழே இறங்கி உள்ளார்கள்.

10 கோடி தங்க கட்டிகள்

அப்போது அந்த காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் அவர்கள் அருகே நின்றுள்ளது. அதில் இருந்து திடீரென இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் குணவத் உள்ளிட்ட 3 பேரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி உள்ளார்கள் மேலும் உடனடியாக காரில் இருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்க கட்டிகளை கொள்ளை அடித்தனர். பின்னர் தங்கள் காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்கள்.

சமயபுரம் போலீஸ் விசாரணை

இதனால் செய்வதறியாது அதிர்ச்சி அடைந்த நிலையில் இருந்த குணவத் உள்ளிட்டோர், பின்னர் இதுகுறித்து சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+