பூரா ஆபாசம்.. 52 வயசாகுது.. டீச்சருக்கே தொல்லை தந்த ஆசிரியர்.. ஹாஸ்டலில் நுழைந்து.. 2 பேர் கைது
பாலியல் டார்ச்சர் தந்த ஆசிரியர்கள் 2 பேர் கைதாகி உள்ளனர்
திருச்சி: மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக வந்த புகார்களை அடுத்து 2 ஆசிரியர்கள் கைதாகி உள்ளனர்.. 2 பேருமே இப்போது ஜெயிலில் உள்ளனர்.
நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகிறது.. அதிலும் பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியர்கள் கைதாகி கொண்டிருக்கிறார்கள்.
கோவை மாணவி தற்கொலை, அடுத்து கரூர் மாணவி தற்கொலை என தற்கொலை லிஸ்ட்கள் நீண்டு வருகின்றன.. இதையடுத்து இத்தனை நாளும் பாலியல் டார்ச்சருக்கு ஆளான மாணவிகள், இன்று துணிந்து புகார் தர முன்வந்து கொண்டிருக்கிறார்கள்.

புகார்கள்
தமிழகத்தின் பல்வேறு ஸ்டேஷன்களில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.. நேற்றுகூட ஒருவர் கரூரில் சிக்கினார்.. அவர் பெயர் பன்னீர்செல்வம்.. பாகநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் சயின்ஸ் டீச்சராக வேலை பார்த்து வருபவர்.. ஆண்-பெண் சேர்ந்து படிக்கும் இந்த பள்ளியில், இவர் சயின்ஸ் பாடம் நடத்தும்போது, கிளாஸ் ரூமிலேயே ஆபாசமாக பேசுவாராம்..

உணர்வுகள்
கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி, மாணவர்களின் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் பாடம் நடத்தியிருக்கிறார்.. பெண்கள் வயதுக்கு வருவது எப்படி என்பது உட்பட பல கேள்விகளை தந்து டெஸ்ட் எழுத வைத்தாராம்.. கடைசியில் மாணவர்கள் கொதித்தெழுந்து எழுத்து பூர்வமாக புகார் தந்தள்ளனர்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பன்னீர்செல்வத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பரமக்குடி
இப்போது மீண்டும் 2 சம்பவம் நடந்துள்ளது.. ஒன்று திருச்சியில், மற்றொன்று பரமக்குடியில்.. இவர்கள் 2 பேருமே ஆசிரியர்கள்தான்.. திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் CE மேல் நிலைப்பள்ளி உள்ளது... அரசு உதவி பெறும் பள்ளி இது.. இந்த பள்ளியின் தாளாளரான ஜேம்ஸ் என்பவர்தான் புகாருக்கு உள்ளானவர்.. பள்ளி வளாகத்திற்குள்ளேயே மாணவர்களுக்கான ஹாஸ்டல் உள்ளது.. அந்த ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது..

விசாரணை
அந்த மாணவி, ஸ்டிரைட்டாக உறையூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.. இறுதியில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் ஜேம்ஸிடம் விசாரணை நடத்தி, இப்போது போக்சோவில் உள்ளே தள்ளி உள்ளனர். அடுத்து பரமக்குடி வாத்தியார்.. இவர் ஒரு படி மேலே போய்விட்டார்.. அதாவது டீச்சர்களுக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. சத்திரக்குடியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த கொடுமை நடந்துள்ளது..

ஆபாசம்
இங்கு பணியாற்றும் சந்திரன் என்பவருக்கு 52 வயதாகிறது.. இவர் மலர்விழி டீச்சருக்கு செல்போன் மூலம் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.. பாலியல் உறவுக்கு அடிக்கடி அழைத்து சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.. அதுவும் நைட் நேரத்தில் தண்ணி அடித்துவிட்டால், எதைஎதையோ ஆபாசமாக உளறி கொட்டி மெசேஜ் அனுப்புவாராம்.. இறுதியில் மலர்விழி டீச்சர் புகார் கொடுக்கவும், சத்திரக்குடி காவல் அதிகாரி நாகராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.. இப்போது இந்த ஆசிரியர்கள் எல்லாம் ஜெயிலில் உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications