"சாயும்" சீமான்.. "சிரிப்புதான் வருது, மாற்று அணி தேவை".. அதென்ன 2 மேட்டர்? நிறம் மாறுதா நாம் தமிழர்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் இன்றைய தினம் தந்துள்ள பேட்டியானது மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. அந்த பேட்டியில் 2 முக்கிய விஷயங்களை சீமான் அறிவித்துள்ளது, வியப்பையும், ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும், அவரது தொண்டர்களிடம் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

2018ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்டோரும், மதிமுகவினரும் இன்று ஆஜரானார்கள்.. இந்த வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

கொடுஞ்சிறை

கொடுஞ்சிறை

இதையடுத்து, கோர்ட்டில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, ஆன்லைன் ரம்மி, சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு தந்த தண்டனை உள்ளிட்டவைகள் குறித்து சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது.. அதற்கு சீமான் சொன்ன கருத்துக்களின் தொகுப்புதான் இவை: "ராஜீவ் கொலை வழக்கில் 30 வருட காலம் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் அவர்களை, "விடுதலை" என்கிற பெயரில் ஜெயிலிலிருந்து சிறப்பு முகாம் என்கிற கொடுஞ்சிறைக்கு மாற்றியுள்ளார்கள்... அப்படியானால், இது எப்படி விடுதலை ஆகும்?

ஜனநாயகம்

ஜனநாயகம்

அவர்கள் 4 பேரையும் உடனடியாக சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம்... ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி தரவில்லை... தமிழ்நாட்டில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால் அது நடைமுறையில் இல்லை... திமுக தேர்தல் வாக்குறுதியில் தகுதியுள்ள பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று எங்குமே சொல்லவில்லையே.. ஆனால் இப்போது திடீரென "தகுதி" உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என்கிறார்கள்... அப்படியானால் எதை வைத்து இந்த தகுதியை தீர்மானிப்பார்கள்?

 சிரிப்பு வருது

சிரிப்பு வருது

பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடியபோது, அது "சூது" என்று சொல்லி, அந்த விளையாட்டை விளையாடுபவர்களை கைது செய்தார்கள். இப்போது, அதையே ஆன்லைனில் ரம்மி என்கிற பெயரில் அறிவுத்திறன் மேம்பாடு என்கிறார்கள்.. ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும்... நாங்கள் தேர்தல்களில் எப்போதுமே தனித்துதான் போட்டியிடுவோம். இதுவரை நடந்த தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை.. ஆனால், மக்கள்தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.. ஒருவர் பிரதமரானால் அவரை விமர்சிக்கவே கூடாதா? அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என்று கோர்ட்டே கூறியிருக்கிறது.. அப்படியிருக்கும்போது, சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஏன் தண்டனை தந்துள்ளது? அதை படிக்கும்போது சிரிப்பு தான் வருகிறது.

எதிர்காலம்

எதிர்காலம்

தமிழ்நாட்டில் அதிமுகவின் எதிர்காலம் குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது.. ஏனென்றால், என் கட்சியின் எதிர்காலம் குறித்து தான் சிந்திப்பேன். வரும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்... கடந்த பாராளுமன்ற தேர்தலில் இப்படி ஒரு அணியை உருவாக்கினார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை "பிரதமர் வேட்பாளர்" என்று ஸ்டாலின் அறிவித்ததால் அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது..

 மாறுது கோலம்

மாறுது கோலம்

மறுபடியும், வரும் தேர்தலில் அதுபோல் ஒரு மாற்று அணியை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்... எப்போதுமே நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்... ஒருவேளை "மாற்று அணி" என்று ஒரு சூழல் வந்தால், அந்த நேரத்தில் கூட்டணியில் சேரலாமா? என்பது குறித்து சிந்திப்போம்... பாஜக அரசு அவர்கள் நினைப்பதை செயல்படுத்துகிறார்கள். இது சர்வாதிகாரம் கூட கிடையாது. கொடுங்கோன்மை ஆட்சி" என்றார் சீமான்.

 B TEAM

B TEAM

சீமானை பொறுத்தவரை, வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்த ஒரு தேர்தலையும் புறக்கணிக்கவும் செய்யாமல், அதேசமயம் யாருடனும் கூட்டணிக்கும் இணங்காமல், "சிங்கிள் சிங்கமாக" தொடர்ந்து களவாடி வருவது பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.. தமிழ் தேசியத்தை முன்வைப்பது ஒருபக்கம், திராவிட அரசியல் மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைப்பது மறுபக்கம் என இரு துருவங்களில் அவரது அரசியல் விடாமல் பயணப்பட்டு வருவதும் பலரால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. ஆனால், பாஜகவின் "பி டீம்", ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலி - போன்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை இதுவரை சீமானால் தடுக்க முடியாவிட்டாலும், அந்த விமர்சனங்களுக்கு அசராமல் பதிலடி தந்து கொண்டுமிருக்கிறார்.

 வியப்பு ஆச்சரியம்

வியப்பு ஆச்சரியம்

இந்நிலையில், பாஜகவுக்கு எதிரான ஒரு அணியை கட்டமைக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளது, பலரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. அத்துடன், தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், "தனி ஒருவராகவே" வலம்வந்து கொண்டிருந்த சீமான், பாஜகவுக்கு எதிரான மாற்று அணி உருவானால், கூட்டணியில் சேர்வது பற்றி சிந்திப்போம் என்று கூறியுள்ளதும், வியப்பை தந்து வருகிறது.. கட்சி ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகியும், இதுவரை ஒரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றதில்லை..

 சிங்கிள் சிங்கம்

சிங்கிள் சிங்கம்

ஆனால், குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவுக்கு அக்கட்சி முன்னேறி உள்ளதையும், கூட்டணி இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு ஏறக்குறைய 6.5%-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்ததையும் யாராலும் மறுக்க முடியாது.. இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட டெபாசிட் வாங்காததால் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் கசிந்து வரும்நிலையில், சீமானின் நிலைப்பாடானது, மிகுந்த எதிர்பார்ப்பை அவரது "தம்பிகளிடம்" ஏற்படுத்தி வருகிறது.. வரும் தேர்தலில் கூட்டணிக்குள் நுழைவாரா சீமான்? அல்லது வழக்கம்போல், "சிங்கம் சிங்கிளாகவே" களமிறங்க போகிறதா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+