Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி பைபாஸ் ரோட்டில் நடமாடும் நகைக்கடை ஹரி நாடார் சுற்றி வளைக்கப்பட்டு.. காருக்குள் பார்த்தால்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சென்னையில் தொழிலதிபருக்கு ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஹரி நாடாரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பல தொழிலதிபர்களிடம் கடன் வாங்கி தருவதாக கமிஷன் பெற்ற மோசடி வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ள நிலையில், இப்போது மீண்டும் ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார்.. இவர் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இவர், "மேட்டூர் சூப்பர் சர்வீஸ்" என்ற பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.

Hari Nadar Trichy Bypass rs70 Lakh Commission 70

நடமாடும் நகைக்கடை

தன்னுடைய பிசினஸை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த பாலு என்பவர் மூலமாக, சென்னையில் வசித்து வரும், தென்காசி - நெல்லை மாவட்டம் மேல இலந்தைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஹரி கோபாலகிருஷ்ணன் என்கிற 41 வயது ஹரி நாடாரை அணுகியுள்ளார்.

அப்போது, ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை கடன் வாங்கி தருவதாக ஹரி நாடார் சொன்னாராம்.. அதற்காக ரூ.77 லட்சம் கமிஷன் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.. இதனைத் தொடர்ந்து, ஆனந்த்குமாரும், ரூ.70 லட்சத்தை பேங்க் மூலமாகவும், ரூ.7 லட்சத்தை ரொக்கமாகவும் தந்துள்ளார்..

பேங்க் மோசடி செய்த ஹரிநாடார்

கமிஷன் பணத்தை பெற்றுக்கொண்ட ஹரி நாடாரும் பாலுவும், தலா ரூ.10 கோடிக்கான 3 டிமாண்ட் டிராஃப்ட், ரூ.5 கோடிக்கான 1 டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து தந்துள்ளார்கள்.. அதாவது ரூ.30 கோடிக்காக 2 டிடி எடுத்து கொடுத்துள்ளனர். ஆனால், ஆனந்த்குமார் அவற்றை வங்கியில் செலுத்தியபோது, அனைத்து ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, ஹரி நாடார் மற்றும் பாலுவிடம் கேட்டபோது, அவர்கள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே பழைய நிலுவை வழக்குகள் குறித்து போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு மேற்கொண்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

திருச்சி பைபாஸ் சாலை - காரில் பணம்

அதன்படி அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், ஹரி நாடார் சென்னையில் இருந்து காரில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது, திருச்சி பைபாஸ் சாலையிலேயே அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரது காரை சோதனையிட்டபோது ரூ.12 லட்சம் முதல் ரூ.12.50 லட்சம் வரை ரொக்கம், 7 செல்போன்கள் மற்றும் 2 டாங்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல சேலத்தில் பாலுவையும் போலீசார் கைது செய்தனர்... கைதான இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 23ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

பனங்காட்டுப்படை கட்சி - சத்திரிய சான்றோர் படை

ஹரி நாடார், ஏற்கனவே "பனங்காட்டுப்படை" கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். ஆனால் அக்கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், "சத்திரிய சான்றோர் படை" என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

ஆனால், பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஹரி நாடார். குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.. ஜாமீனில் வெளியில் வந்த பிறகும்கூட, புது புது மோசடியில் ஈடுபட்டும், தலைமறைவாகவும் இருந்து வந்துள்ளார்.. இந்நிலையில்தான், திருச்சி பைபாஸ் ரோட்டில் ஆன் தி வேயில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+