கபசுர குடிநீர் பொடி ஒரிஜினல்தானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அரசு டாக்டர் காமராஜ் கூறும் டிப்ஸ்
திருச்சி: கொரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இது குறித்து திருச்சி மாவட்ட சித்த அலுவலர் டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவை கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வித அச்சமும் இன்றி மக்கள் வெளியில் நடமாடி வருகின்றனர். அது நமக்கு தான் ஆபத்தை விளைவிக்கும்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். அப்போது தான் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும். அரசு உத்தரவை மீறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும். அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகளிலும் பல ஆண்டுகளாக நுரையீரல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது புதிய மருந்து கிடையாது. இதை பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது தடுப்பு மருந்தாகும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் கபசூர குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்கள் அதை வாங்கி பருகி நோய் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், வெளியில் இந்த குடிநீர் பொடியை வாங்கும்போது அதில் நிறுவனப் பெயர், அனுமதி எண், மூலப்பொருள்கள் விபரம், விலை, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டும். இவை குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மருந்துகளை வாங்க கூடாது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications