திருச்சியில் மாமனார் எழுதிய உயில்.. பட்டா பெயர் மாற்றத்தில் ட்விஸ்ட்.. விஏஓ சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க தேவையில்லை.. ஏனெனில் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது.இ சேவை மையங்களில் விண்ணப்பித்தால், அடுத்த 15 நாளில் உங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பட்டா பெயர் மாற்றம் செய்வது அந்த அளவிற்கு எளிதாகிவிட்டது. ஆனால் இன்னமும் பட்டா பெயர் மாற்றம் செய்ய சில ஊர்களில் லஞ்சம் கேட்பது நடக்கிறது. அப்படி லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து புகார் அளிப்பதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருச்சி லால்குடியில் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்வது என்பது ஆன்லைனில் மிகவும் எளிதாக செய்ய முடியும். இப்போது பத்திரப்பதிவு செய்தால் கையோடு பட்டாவும் வந்துவிடும்.ஆனால் ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள், பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.. உங்களால் ஆன்லைனில் பட்டாவிற்கு தமிழ் நிலம் வெப்சைட்டில் விண்ணப்பிக்க இயலாது என்றால், இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

How was the VAO caught taking bribe for changing the name of the Patta in Trichy

பட்டா பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்

1 கிரையப் பத்திரம்
2. செட்டில்மென்ட் பத்திரம்
3. பாகப்பிரிவினை பத்திரம்
4. தானப் பத்திரம்
5. பரிவர்தனை பத்திரம்
6.அக்குவிடுதலைப் பத்திரம்

இதில் ஒரு பத்திரத்தின் நகல் வேண்டும். பத்திரப்பதிவு செய்தவர்களின் ஆதார் அல்லது அடையாள அட்டை , முகவரி சான்றிதழ், பதிவு பத்திரம் போன்றவை வேண்டும். ஆனால் தானப்பத்திரம், பாகப்பரிவினை பத்திரம் உள்ளிட்டவை என்றால் கண்டிப்பாக வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்(இறந்துவிட்டால் மட்டும்) வேண்டும்.இதனை கொண்டு போனால் இசேவை மையத்தில் எளிதாக விண்ணப்பித்துவிடலாம்.

பட்டாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் என்றால், தமிழ் நிலம் வெப்சைட் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் உங்கள் பெயர், மொபைல், எண் முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் உட்பிரிவுள்ள இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத இனங்கள் என இரண்டு முறையில் இருக்கும். உட்புரிவு இல்லாத நிலம் என்றால் அதற்கான லிங்கிலும், உட்புரிவு உள்ள இனம் என்றால் அதற்கான லிங்கிலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.


பட்டா எளிதாக கிடைக்கும்

இதனை செய்த பின்னர் அதிகாரிகள் உங்களை போனில் அழைத்து நிலத்தை அளக்கும் நாளில் வரச்சொல்வார்கள். மேலும் அது தொடர்பான எஸ்எம்எஸ் வரும். நிலத்தை அளந்து உறுதி செய்த பின்னர், அதுபற்றி எஸ்எம்எஸ் வந்துவிடும். இறுதியாக பட்டாவும் வந்துவிடும். ஆனால் பட்டா தருவதற்கு ஒரு நாள் முன்பு அல்லது இரண்டு நாள் முன்பு உங்களை அழைத்து 10 ஆயிரம் கொடு, 20 ஆயிரம் கொடு என்று கேட்டால் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படியும் கேட்டால், தருவாக கூறிவிட்ட வேலையை செய்ய வைக்கலாம். உங்களுக்கு பட்டாவும் தந்துவிடுவார். அதன்பிறகு லஞ்சம் கேட்கும் போது, நீங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அவர்கள் குறிப்பிட்ட அதிகாரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள். திருச்சி மாவட்டம் லால்குடியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

லஞ்சம் வாங்கியவர் கைது

அதற்கு கிராம நிர்வாக அதிகாரி மோகன பூபதி ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இந்திரா காந்தி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்த ஏற்பாட்டின்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை நேற்று கிராம நிர்வாக அதிகாரி மோகன பூபதிடம் அவரது அலுவலகத்தில் வைத்து இந்திரா காந்தி கொடுத்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் அதிரடியாக கிராம நிர்வாக அதிகாரி மோகன பூபதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் லால்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+