2026ல் முதல்வராவது உறுதி.. அண்ணாமலையை மாற்றவே முடியாது.. 'ஏ' டீமே நான் தான்.. திருச்சி சூர்யா பரபர!
வரிச்சியூர் செல்வம் தான் என்னிடம் கெஞ்சினார் என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
திருச்சி : அண்ணாமலை 2026ல் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் ஆகிவிட்டால், அடுத்த 25 வருடங்களுக்கு தமிழ்நாடு பாஜகவிற்கு அண்ணாமலை தான் தலைவர் என்றும், அண்ணாமலையின் ஏ டீமே நான் தான் என்றும் பாஜகவில் இருந்து அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கையில், பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா அவரது ட்விட்டர் பக்கத்தில் என்னை ரவுடி என பதிவு செய்திருந்தார், அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார் எனக் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருச்சி சூர்யா, நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவர்தான் என்னிடம் மன்னிப்புக் கேட்டார் எனக்கூறி அதற்கான ஆதாரமாக ஒரு ஆடியோவையும் வெளியிட்டார்.

திருச்சி சூர்யா ஆடியோ
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில செயலாளராக இருந்த திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திருச்சி சூர்யாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார். மேலும் அவரது நடவடிக்கையில் மாற்றம் கண்டால் அவருக்கு பதவி தேடி வரும் என்றும் கூறியிருந்தார். ஆனால், சில நாட்களிலேயே திருச்சி சூர்யா, பாஜக உடனான தனது உறவை முறித்துகொள்வதாக அறிவித்தார்.

இப்போதும் பாஜக தொண்டன் தான்
இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சூர்யா, "பாஜகவில் மறுபடியும் சேர அழைப்பு வந்ததா என கேட்கிறார்கள். நான் பாஜக தொண்டனாக தற்போதும் தொடர்கிறேன். மார்ச் மாத இறுதியில் சஸ்பெண்ட் காலம் முடிகிறது. கட்சியின் வளர்ச்சி, அண்ணாமலையின் உழைப்பு சிலரால் வீணாகிறது என்று தான் சொன்னேன். என் கருத்தை நான் வெளிப்படுத்திவிட்டேன். அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்காததும் டெல்லியின் வேலை. கட்சியில் நிலவும் அதிருப்தியால் வளர்ச்சி தடைபடுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன். நான் குற்றம்சாட்டியவர்கள் வெளியில் போனால் தான் நான் கட்சிக்குள் வருவேன் என சொல்ல முடியாது.

அண்ணாமலை முதல்வர் ஆவார்
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பு குறிப்பிட்ட காலம் வரை தான், அண்ணாமலை காலத்திற்கு பிறகு வேறு தலைவர் வரும்போது கட்சியில் இருக்கமாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். 2026 வரை அண்ணாமலை தான் பதவியில் நீடிப்பார். 2026ல் தமிழ்நாட்டில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அப்போது இவர் முதலமைச்சராக இருப்பார் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லி வருகிறேன்.

ஏ டீமே நான் தான்
அண்ணாமலை முதலமைச்சர் ஆகிவிட்டால் அவரது மாநிலத் தலைவர் பொறுப்பு அத்துடன் முடிந்து விடாது. அடுத்த 25 வருடங்களுக்கு தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை தான் தலைவர். அண்ணாமலையின் பி டீம் ஆக நீங்கள் இருக்கிறீர்களா என என்னிடம் கேட்கிறார்கள். அண்ணாமலையின் ஏ டீமே நான் தான். அவரது மெயின் டீம் நாங்கள் தான்.

காயத்ரி பின்னால் யார்?
காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். நடைபயணம் போகப் போகிறேன், பெண்களுக்கு பாதுகாப்பு பெற்றுத் தருகிறேன் என்கிறார். நடைபயணம் போக வேண்டியது தானே. லட்சணம் என்ன என்று தெரிந்துவிடுமே. அப்போது தான் உங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியும். அண்ணாமலையை மட்டும் விமர்சனம் செய்துகொண்டு இருந்தால் உங்களால் ஒன்றும் சாதித்து விட முடியாது" எனத் தெரிவித்தார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications