அப்பா கூப்பிட்டார்.. உடனே வந்துட்டேன்.. சொன்னா பிரச்சாரமும் செய்வேன்.. விஜய பிரபாகரன்
விஜயகாந்த் சொன்னால் பிரச்சாரம் செய்வதாக விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
Recommended Video

திருச்சி: "அப்பா சொன்னால் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்வேன்" என்று விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலைக்கு பிறகு அவரது மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தபோதுகூட பேஸ்புக்கில் அவரது நேரலை செய்தி கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும் ஈர்த்தது.
கட்சி சார்பில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு வருவதுடன், தேமுதிகவை வளர்த்தெடுக்க இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேமுதிக கொடியேற்று விழா மற்றும் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தேமுதிக வளர்கிறது
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன் சொன்னதாவது: "தேமுதிக தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. சேவைக்காகவே வந்திருக்கிறேன்.

அப்பா என்னை கூப்பிட்டார்
என் அப்பா என்னை கூப்பிட்டார். நான் வந்துவிட்டேன்" என்றார். இதையடுத்து செய்தியாளர்கள், வரப்போகிற தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

பிரச்சாரம் செய்வேன்
அதற்கு, "இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் அப்பாவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என் அப்பா சொன்னால் தேர்தல் பிரசாரத்திற்கு கண்டிப்பாக செல்வேன்" என்று பதிலளித்தார்.

உற்சாக வரவேற்பு
முன்னதாக கல்யாணத்துக்கு வந்திருந்த விஜயபிரபாகரனுக்கு, செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக வரவேற்பின்போது, சிறுவர்கள் ஆடிய தேவராட்டம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து, ரவுண்டானா அருகே கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றி வைத்து கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications