வாஷ்அவுட்.. கெத்து காட்டிய சினேகா.. டெபாசிட்டை இழந்த பெருந்தலைகள்.. திகைத்து போன திருச்சி..!
சினேகா பெண் சுயேட்சை வேட்பாளர் திருச்சியில் வெற்றி பெற்றார்
திருச்சி: ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் சினேகாவின் வெற்றியை கண்டு பூரித்து போயுள்ளது.. சுயேட்சையாக போட்டியிட்ட இந்த இளம் பெண் வேட்பாளர் ஒரே நாளில் சக போட்டி வேட்பாளர்களை திகைக் வைத்து விட்டார்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது... அதற்கு பிறகு 11 வருடங்களாக நடத்தப்படவே இல்லை.. இப்போது மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதுமே ஒருவித பரபரப்பு தமிகழத்தில் தொற்றிக் கொண்டது.
கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம், பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தனித்து களமிறங்கின..

இளம் பெண் வேட்பாளர்கள்
அதேபோல, அரசியல் கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களும் சுயேட்சையாக போட்டியிட முன்வந்தனர்.. இதற்கு நடுவில் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட ஆர்வம் தெரிவித்து வேட்பு மனுதாக்கல் செய்ய ஆரம்பித்தனர்.. ஒருகட்டத்தில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைகளும் ஒன்றாக திரண்டதால், வேட்பு மனுதாக்கல் செய்யும் பல இடங்களில் கூட்டம் அலைமோதியது... அதிலும் இளம்பெண் வேட்பாளர்கள் நிறைய பேர் இந்த முறை போட்டியிட்டனர்.

சுயேச்சைகள்
நடந்து முடிந்த தேர்தலுக்கான முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டன.. அதில் பலருக்கும் ஷாக் தந்தவர் சுயேட்சையாக போட்டியிட்ட ஒரு மாணவி ஆவார்.. அவர் பெயர் சினேகா.. 22 வயதாகிறது.. திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார்.. தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் 2ம் வருடம் படித்து கொண்டிருக்கிறார்.

துவாக்குடி
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் பதிவான வாக்குகள் நேற்று காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் எண்ணப்பட்டது.. அப்போது திமுக 14 வார்டுகளிலும், அதிமுக, மதிமுக, விசிக, அமமுக தலா ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.. இதில் ஒருவர் சினேகா.. மொத்தம் 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்ததுடன், அவர்களை டெபாசிட் இழக்க செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

பரபரப்பு
அந்த வார்டில், சினேகாவை சேர்த்து மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.. அதாவது, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, 2 சுயேச்சை உள்ளிட்ட 7 வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்தார் சினோ.. ஆனாலும், அமமுக வேட்பாளர் மட்டும் 191 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டார்.. இந்த 5-வது வார்டில் மொத்தம் 1,057 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மொத்த 9 பேரையும் திணறடித்துவிட்டார் சினேகா.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications