அக்.25 முதல் திருச்சி -அபுதாபி இண்டிகோ விமான சேவைகள் ரத்து! அதிருப்தியில் பயணிகள்!
திருச்சி: திருச்சி - அபுதாபி இடையே விமான சேவைகள் அக்டோபர் 25 முதல் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருக்கிறது. முன்னதாக வாரத்திற்கு நான்கு நாட்கள் வீதம் இந்த விமான சேவை வழங்கப்பட்டு வந்தது.
இண்டிகோ விமான நிறுவனம் திருச்சியில் உள்நாட்டு விமான சேவையை மட்டுமே இயக்கி வந்த நிலையில், 2024 ஆகஸ்ட் 11 முதல் திருச்சி - அபுதாபி இடையே விமானச் சேவைகளையும் தொடங்கியது. திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வந்த இந்த விமான சேவை சில நிர்வாக காரணங்களால், அக்டோபர் 25-ஆம் தேதி முதல் திருச்சி -அபுதாபி 4 விமான சேவைகளையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்துக்கு 3 விமானச் சேவைகளை அளிக்கும் நிலையில், இண்டிகோ நிறுவனம் திடீரென தற்போது அனைத்து சேவைகளையும் ரத்து செய்திருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துபாய், சார்ஜா பயணக் கட்டணங்களை ஒப்பிடும்போது, அபுதாபி செல்வதற்கான கட்டணம் சற்று அதிகமாக உள்ளது. எனவே, அபுதாபி செல்லும் பயணிகளில் பெரும்பாலானோர் துபாய் அல்லது சார்ஜாவுக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக அபுதாபி செல்வது அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதன் காரணமாக, அபுதாபி விமான சேவைகள் ரத்து நடவடிக்கையை இண்டிகோ நிறுவனம் எடுத்திருக்கலாம். துபாய் அல்லது சாா்ஜா சேவைகளை தொடரவும் முடிவு செய்திருக்கலாம் என தொழில்நிபுணா்கள் சிலா் தெரிவிக்கின்றனா்.
இதற்கு முன்னர், திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து அபுதாபி செல்லும் பயணிகள் கோவை, திருவனந்தபுரம் அல்லது சென்னை வந்துதான் பயணித்திருந்தனர். இதனையடுத்துதான் திருச்சியிலிருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டது. இப்போது திருச்சி மட்டுமல்லாது கோவையிலிருந்து அபுதாபிக்கான நேரடி விமான சேவையும் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, கோவை விமான நிலையத்தில் குளிர்கால அட்டவணையில் அபுதாபி விமான சேவைக்கு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அனுமதி தற்போது வரை கிடைக்கவில்லை என்று கடந்த செப்டம்பரில் செய்தி வெளியானது. அக்டோபர் இறுதி வரை கோவையிலிருந்து அபுதாபிக்கு வழக்கம்போல விமானங்கள் இயக்கப்படும். ஆனால், அதன் பின்னர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை விமான சேவை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இது திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications