தனிப்பட்டா வாங்க இவ்வளவு லஞ்சமா.. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நில அளவையர் சிக்கியது எப்படி?
திருச்சி: கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க எண்ணியிருக்கிறார். இதற்காக ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்கக்கோரி விண்ணப்பம் செய்ய சென்றுள்ளார். ஆனால் லஞ்சம் கேட்டார்கள். இந்த விவகாரத்தில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நில அளவையர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
வீட்டு மனை பத்திரப்பதிவு செய்ய, வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்க, பட்டா வாங்க, பட்டாபெயர் மாற்றம் செய்ய, தனிப்பட்டா வாங்க, வீடு கட்டும் போது நிலத்தை அளக்க, வீட்டிற்கு மின் இணைப்பு வாங்க, குடிநீர் இணைப்பு வாங்க, மின் இணைப்பு வாங்க என பல்வேறு வழிகளில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது பலரும் புகார் அளிக்கிறார்கள். அந்த வகையில் திருச்சியில் ஒரு நில அளவையர் கைதாகி உள்ளார்.

கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் அங்குள்ள டி.என்.பி.எல். காகித ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 3-ந்தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவிற்கு சென்றாராம். அங்கு தனது நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க கோரி விண்ணப்பத்துள்ளார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த நில அளவையரான 34 வயதாகும் அருண் என்பவர் ரூ.24 ஆயிரம் லட்சம் கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜேந்திரன், பின்னர் ரூ.9 ஆயிரம் தருவதாக ஒப்புகொண்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார்.
இதையடுத்து ராஜேந்திரன் நேற்று திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.9 ஆயிரத்தை நில அளவையர் அருணிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து அருணை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications