எடப்பாடி பழனிசாமியின் “வலது கரத்துக்கு” சுத்து போட்ட ஐ.டி அதிகாரிகள்.. இளங்கோவன் கல்லூரியில் ரெய்டு!
திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தனியார் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கல்லூரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், அதிமுக நிர்வாகியுமான இளங்கோவனுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சராக இருந்தபோதும், மாவட்ட செயலாளர் பதவியையும் தானே வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென்று தனது பதவியை இளங்கோவனுக்கு விட்டுக் கொடுத்தார். அந்த அளவுக்கு தனது வலது கரமாக இளங்கோவனை வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஏற்கனவே இளங்கோவனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications