திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐ.யூ.எம்.எல்.தலைவர் காதர் மைதீன் மனைவி காலமானார்... திருச்சியில் இறுதிச்சடங்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐ.யூ.எம்.எல்.தலைவர் காதர் மைதீன் மனைவி காலமானார்-வீடியோ

    திருச்சி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் மனைவி லத்தீபா பேகம் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

    திருச்சி காஜாமியான் நகரில் உள்ள அவரது இல்லத்தில் லத்தீபா பேகத்தின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் லத்தீபா பேகம்.

    சுஜித் மீண்டும் வருவான்.. நான் சொல்வதை செய்யுங்க.. செலவை கூட நானே ஏத்துகிறேன்.. ராகவா லாரன்ஸ்சுஜித் மீண்டும் வருவான்.. நான் சொல்வதை செய்யுங்க.. செலவை கூட நானே ஏத்துகிறேன்.. ராகவா லாரன்ஸ்

    எளிமையானவர்

    எளிமையானவர்

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் காதர் மைதீனை பொறுத்தவரை அனைவரிடமும் எளிமையாக பழகக்கூடியவர். ஒரு கட்சிக்கு தேசியத்தலைவராக இருந்தும் கூட எந்தவித படோடாபமும் இல்லாமல் அமைதியாக வலம் வருபவர்.

     அவசியம் இருந்தால்

    அவசியம் இருந்தால்

    காதர் மைதீன் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஆனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் திருச்சியில் தான் வசித்து வந்தனர். சென்னை மண்ணடியில் கட்சியின் தலைமை அலுவலகம் இருந்தாலும் கூட அவசியம் ஏற்பட்டால் மட்டுமே காதர் மைதீன் இங்கு வந்து செல்வார்.

    கவனிப்பு

    கவனிப்பு

    காதர்மைதீன் மனைவி லத்தீபா பேகம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு திருச்சி உறையூரில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் காதர் மைதீன் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கூட தவிர்த்து திருச்சியிலேயே தங்கி மனைவியை கவனித்து வந்தார்.

    காலமானார்

    காலமானார்

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், லத்தீபா பேகத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் காலமானார்.

    நாளை அடக்கம்

    நாளை அடக்கம்

    காதர்மைதீன் மனைவி காலமான செய்தி மதுரை விமான நிலையத்தில் இருந்த ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சி சென்று காதர்மைதீனுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே லத்திபா பேகத்தின் உடல் நாளை (31.10.19)_பிற்பகல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    English summary
    iuml national president kadermohideen wife demise
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X