"செவலை" நம்மை விட்டுப் போய்ருச்சு.. சோகத்தில் திருச்சி கிராமம்!
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற செவலை உயிரிழந்துவிட்டது.
Recommended Video

திருச்சி: "விஷயம் தெரியுமா? நம்ம செவலை நம்மள எல்லாம் விட்டுட்டு போயிடுச்சு?" என்ற இந்த செய்திதான் திருச்சி மாவட்ட மக்களை கலங்க வைத்துள்ளது.
யார் இந்த செவலை? ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டியை கலக்கிய ஜல்லிக்கட்டு காளைதான் செவலை. மணிகண்டம் கிராமத்தில் பழனியாண்டி வளர்த்த காளை!! செம முரட்டு பையன்!! போட்டின்னு வந்துட்டா ஜெயிச்சுட்டுதான் வீட்டுக்கு திரும்புவான். அவ்வளவு ரோஷக்காரன்!! மணிகண்டன் விவசாயியாக இருந்தாலும் செவலை கூட இருந்தாலே அவருக்கு ஒரு கெத்து தான்.

இல்லைன்னா, மணிகண்டம் கிராமத்து பழனியாண்டியை இந்நேரம் பேசி கொண்டு இருப்போமா? அலங்காநல்லூர், தென்னலூர், பாலமேடு, சூரியூர் போன்ற புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசை தட்டி சென்று வாங்கி வந்துவிடுவான் செவலை. என்னமோ திடீர்ன்னு செவலைக்கு உடம்பு சரியில்லாம போச்சு. எவ்வளவு முயற்சித்தும் காப்பாற்ற முடியாமல் செவலை உயிரிழந்துவிட்டது.
செவலை உயிரிழந்த செய்தியறிந்து ஏராளமான ஜல்லிக்கட்டு வீரர்கள் கண்கலங்க போனார்கள். பல ஊர்களிலிருந்து செவலைக்கு அஞ்சலி செலுத்த கிளம்பி வந்தனர். அவர்களோடு பொதுமக்களும் சேர்ந்து செவலைக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விடைகொடுத்து அனுப்பி வைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications