90 வயதிலும் தளராத அரசியல் பயணம்! கி.வீரமணிக்கு புதிய பிரச்சார வேன்! 40 பேர் வழங்கிய நன்கொடை!
திருச்சி: 90 வயதிலும் தமிழகமெங்கும் பரப்புரை பயணம் மேற்கொண்டு வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு புதிய பிரச்சார வேன் திருச்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சார வாகனம்: 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது பிரச்சார வேனை மாற்றுவது கி.வீரமணியின் வழக்கம். அந்த வகையில் பெரியார் கொடுத்த வாகனம் தொடங்கி 1981, 1987, 1994, 1995, 2000, 2007, 2012, 2017ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட பிரச்சார வேன்கள் லட்சக்கணக்கான கிலோ மீட்டர்கள் ஓடி ஓடி ஒரு கட்டத்தில் ஓய்வுக்குச் சென்றுவிட்டன. கார் பயணம் இல்லாமல் பிரச்சார வேனில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரம் கிலோ மீட்டர் கி.வீரமணி பயணித்திருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு நாட்களை பயணத்திலேயே தனது வாழ்நாளை கழித்திருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

40 பேரிடம் நன்கொடை: கி.வீரமணிக்கு புதிய பிரச்சார வேன் வாங்குவதற்காக 40 நன்கொடையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து ஆளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. கி.வீரமணியின் ஓட்டுநராக கடந்த 26 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் தமிழ்ச்செல்வன். அதேபோல் கி.வீரமணியின் பிரச்சார பயணத்தில் கடந்த 28 ஆண்டுகளாக அவருடன் பயணித்து வரும் போட்டோகிராஃபர் சிவக்குமார். இவர்கள் இருவரையும் பெருமைப்படுத்தும் வகையில் அவர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

அமைச்சர் நேரு: புதிய பரப்புரை வாகனத்தின் சாவியை ஆசிரியர் கி.வீரமணி கையில் ஒப்படைத்த அமைச்சர் நேரு பேசியதாவது; "ஆசிரியருக்கு வழங்கப்படும் பிரச்சார ஊர்தியின் திறவுகோலை வழங்கும் வாய்ப்பை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இதைவிட ஒரு பெருமை எங்களுக்கு இல்லை. முதலமைச்சரிடம் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதை தெரிவித்த போது 'ஏன் அவர் ஓய்வெடுக்காமல் இருக்கிறார்? அவரை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள் அவரின் பணி நமக்குத் தேவை'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக நேரு தெரிவித்தார்.''
வெற்றிப்பயணம்: ''ஆசிரியர் கி.வீரமணியின் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வேண்டும். அந்தப் பயணங்களில் எங்க பயணமும் இணைந்திருக்க வேண்டும். நீங்கள் இருக்கின்ற வரை தான் இந்த இயக்கத்திற்கு பலம். ஆசிரியரின் பயணம் தொடர வேண்டும்''. இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார்.












Click it and Unblock the Notifications