ஸ்ரீரங்கத்தில் லதா ரஜினிகாந்த்.. சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனைவின்னாலும் 4 பேரன்களுக்கு பாட்டியாச்சே!
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்த லதா ரஜினிகாந்த் தனது பேரனுக்கு அங்குள்ள கடைகளில் சொப்பு சாமான் வாங்கிச் சென்ற சம்பவம் வைரலாகி வருகிறது.
108 வைணவ தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் கோயில். இதை பூலோக வைகுண்டம் என அழைப்பார்கள். இங்கு அரங்கநாத சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விழாக்கள் களைகட்டும்.

இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அது போல் உள்ளூர் மக்களும் வந்து செல்கிறார்கள். இங்கு நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார்.
தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதையடுத்து அங்குள்ள கடையில் 5 கிலோ எடை கொண்ட அரங்கநாத பெருமாள் சுவாமியின் வெங்கல சிலையை வாங்கினார். பின்னர் நாம கட்டி, ஸ்ரீசூரணம், சாலிகிராமம் மரப்பெட்டி, சொப்புச் சாமான்கள், பொம்மைகளை வாங்கினார்.

இவற்றை அவருடைய பேரக் குழந்தைகளுக்காக லதா வாங்கியிருந்தார். லதா ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களையும் திருச்சி அரங்கநாத சுவாமி கோயிலில் வாங்கிச் சென்றார். என்னதான் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக இருந்தாலும் அவரும் பாட்டிதானே! அந்த பாசம் இருக்காதா என்ன? ரஜினிகாந்த் பெங்களூர் சென்றிருப்பதால் அவர் லதாவுடன் ஸ்ரீரங்கம் வரவில்லை.
பெங்களூரில் தான் பேருந்து நடத்துநராக பணிபுரிந்த ஜெயா நகர் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பழையதை மறக்காமல் ரஜினிகாந்த் தனது சினிமா வாழ்க்கை தொடங்க காரணமாக இருந்த அந்த டிப்போவுக்கு வந்துள்ளது அங்கிருந்தோரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெயிலர் படம் ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் ரஜினிகாந்தும் லதாவும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். சுவாமி பக்தி உள்ள இருவரும் அவ்வப்போது தனித்தனியாகவும் சேர்ந்தும் கோயில்களுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த 2019-ஆம் ஆணடு அத்திவரதரை தரிசிக்க இருவரும் குடும்பத்தினருடன் சென்றிருந்தனர். சிங்கப்பூரில் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலம் பெற்றதுடன் திருப்பதியில் லதா முடி காணிக்கை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications