வந்தே பாரத்தை விடுங்க.. திருச்சியிலிருந்து பெங்களூருக்கு வெறும் 1.15 மணி நேரத்தில் போகலாம்! செம வசதி
திருச்சி: தமிழ்நாட்டில் தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில் சேவைகளால் திருச்சிக்கு கூடுதல் ரயில்கள் கிடைத்துள்ளன. ரயில்களோடு இல்லாமல் தற்போது புதிய விமான சேவைகளும் திருச்சிக்கு கிடைக்க தொடங்கி உள்ளது.
வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சென்னை- திருநெல்வேலி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இது திருச்சி வழியாகவே செல்வதால் திருச்சிக்கு கூடுதல் ரயில் சேவைகள் கிடைத்துள்ளன.

எங்கே நிற்கும்: இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம்,, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும். மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும்.
திருச்சி: தமிழ்நாட்டில் தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில் சேவைகளால் திருச்சிக்கு முக்கிய நல்ல செய்தி ஒன்று கிடைத்துள்ளது. சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் திருச்சியில் நிற்கும். இந்த ரயில் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும். இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். இதுதான் ரயில் சேவையின் நேரம்.
இதில் திருநெல்வேலியில் காலை 6 மணிக்கு தொடங்கும் ரயில் 10 மணிக்கு திருச்சி வரும். அதேபோல் சென்னையில் பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் 6.50 மணிக்கு திருச்சிக்கு வரும். அதாவது சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில் இந்த ரயில் திருச்சிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சிக்கு ரயில்: திருச்சிக்கு இதன் மூலம் 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து ரயில் சேவை இயங்கும். ஏற்கனவே தேஜாஸ் எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. அது சென்னையில் காலை 6 மணிக்கு தொடங்கி திருச்சியில் 10 மணிக்கு காலையில் இறங்கும். இதன் மூலம் சென்னை - திருச்சிக்கு 2 ரயில்கள் 4 மணி நேர சேவைகளை இயக்குகிறது. இதன் மூலம் மக்கள் எளிதாக இனி சென்னை டூ திருச்சிக்கு பயணிக்க முடியும்.
விமான சேவை: ரயில்களோடு இல்லாமல் தற்போது புதிய விமான சேவைகளும் திருச்சிக்கு கிடைக்க தொடங்கி உள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த சேவை மூலம் 1 மணி நேரம் 15 நிமிடத்தில் பெங்களூருக்கு செல்ல முடியும். இரவு 12.15 மணிக்கு இந்த சேவை மேற்கொள்ளப்படுகிறது.
ஒன்றரை மணிக்கு நள்ளிரவில் இந்த விமானம் பெங்களூரை அடையும். இது தினசரி சேவை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கண்ணை மூடி திறக்கும் முன் பெங்களூருக்கு எளிதாக திருச்சியில் இருந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருச்சியில் இருந்து பெருநகரங்களுக்கு தற்போது பயணம் மிக எளிதாகி உள்ளது.
திருச்சியில் தற்போது புதிய விமான நிலைய முனையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானம் முடிந்ததும் விரைவில் கூடுதல் விமானங்கள் இங்கே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications