திருச்சியில் கனமழையில் டிராக்டரில் வயலை உழுத போது சோகம்.. விவசாயி இடி மின்னல் தாக்கி சாவு
Recommended Video
திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்
புதுக்கோட்டை மாவட்டம் ஊரத்திபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது45). விவசாய கூலி தொழிலாளி. இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் உள்ள ஒருவரது வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் நேற்று ஈடுபட்டார். அப்போது அங்கு கன மழை பெய்தது. திடீரென இடி, மின்னல் தாக்கியதில் விவசாயி ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்..
இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள ஒட்டக்குடி காவிரி ஆற்று பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது காவிரியாற்றில் சுமார் 50வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
அவர்கள் இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆற்றில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை யாரும் கொலை செய்து இங்கு வந்து வீசி சென்றார்களா? அல்லது ஆற்றில் தவறி விழுந்து இறந்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications