Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'எப்படியோ அண்ணியாரின் ஆசை கடைசியாக நிறைவேறியது'.. பிரேமலதா குறித்து திருச்சி சூர்யா பதிவு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அழுகிய பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது .. நான் சொன்னதே நடந்தது.. அதிமுக தேமுதிகவுக்கு ராஜ சபா சீட் தர தயாராக இல்லை.. திமுக ராஜ சபா சீட் ஒப்புக் கொண்டதினால் கூட்டணி அமைக்கப்பட்டது. மேலும் 6 சட்டமன்ற தொகுதிகள் உடன்பட்டுள்ளது.. எப்படியோ அண்ணியாரின் ஆசை கடைசியாக நிறைவேறியது மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் எல்.கே. சுதீஷ் என்று திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் களைக்கட்டத்தொடங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாடு, மாநிலங்களவை எம்பி சீட் பேரம் என களம் விறுவிறுப்பாக இருக்கிறது. இந்த முறை சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் லீக், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் என பெரிய படையே திமுக கூட்டணியில் உள்ளது.

lk sudhish becomes a Rajya Sabha member Trichy Surya reviews that Premalatha s wish has come true

அதிமுக கூட்டணி

அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி அணி), ஐஜேகே, தமாக என அங்கும் ஒரு பெரிய கூட்டணியே இருக்கிறது. இதுதவிர விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தனியாக நிற்க முடிவு செய்துள்ளது. வழக்கம் போல் சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து நிற்க போகிறது. இந்த முறை சில மாற்றங்கள் வந்துள்ளது என்றால், தவெக வருகை.. மற்றும் கூட்டணியில் சில மாற்றங்கள் தான்.

தவெக கூட விமர்சனம் செய்கிறது

அதன்படி இந்த முறை திமுக கூட்டணியில் 2024 போலவே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஐக்கியமாகி உள்ளது. அதற்கு அடுத்த அதிரடியாக பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. கமல் இணைந்த போது இருந்த விமர்சனத்தை விடவும், பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக இணைந்ததை, அதிமுக, பாஜகவினர் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதேநேரம் எந்த கூட்டணியிலும் இல்லாத தவெக கூட திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை விமர்சித்துள்ளது.

கோவை ஈஷா விழாவில் பிரேமலதா

அண்மையில் கோவையில் நடந்த ஈஷா யோகா மைய சிவாரத்திரி விழாவில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டிருந்தார். அதனால் கிட்டத்தட்ட அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக சேரப்போகிறது என்றே பேசப்பட்டது. அதேபோல் அமைச்சர் ராஜகண்ணப்பன்கூட தேமுதிகவை சில நாள் முன்பு கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் விமர்சனங்கள் இருந்தாலும், திடீர் திருப்பமாக பிரேமலதா விஜயகாந்த் அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதை உறுதி செய்தார். ஏற்கனவே வலுவான கூட்டணியாக உள்ள திமுகவிற்கு இது கூடுதல் பலமாக ஆளும் கட்சி ஆதரவாளர்கள் பார்க்கிறார்கள்.

திருச்சி சூர்யா விமர்சனம்

அதேநேரம் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்காமல் இல்லை.. அரசியல் விமர்சகரான திருச்சி சூர்யா, "அழுகிய பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது .. நான் சொன்னதே நடந்தது அதிமுக தேமுதிகவுக்கு ராஜ சபா சீட் தர தயாராக இல்லை திமுக ராஜ சபா சீட் ஒப்புக் கொண்டதினால் கூட்டணி அமைக்கப்பட்டது. மேலும் 6 சட்டமன்ற தொகுதிகள் உடன்பட்டுள்ளது.. எப்படியோ அண்ணியாரின் ஆசை கடைசியாக நிறைவேறியது மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் எல்.கே. சுதீஷ்" என்று கூறியுள்ளார்.

மாரிதாஸ் பதிவு

இதேபோல் யூடியூபரான மாரிதாஸ், "தேமுதிக நல்ல விலைக்கு விற்கப்படும் என்று போர்டு தான் போடவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வளவு விலை பேசுவது மட்டுமே அரசியல் என்று ஆக்கிவிட்டார் பிரேமலதா அவர்கள். பிரேமலதா எவ்வளவு கிடைக்கும் என்பதற்காகவே காத்திருக்கிறார் என்று ஊரே பேசும் நிலைக்கு தேமுதிகவை கொண்டு வந்தது தான் அக்காவும் தம்பியும் செய்த சாதனை" என்று விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+