திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உணவு பார்சல்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை.. எப்படி பெறுவது விவரம்

Google Oneindia Tamil News

திருச்சி: உணவு பொட்டலங்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகளை திருச்சி மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் ஆணையரக அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்சி மாநகரில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவில் இருந்து மருந்தகங்கள், உணவங்கள் (பாா்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

lock down: Identity card for those who are in the business of delivering and distributing foods in trichy

அதன்படி வயது முதிர்ந்தோர், வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர் சமைத்த உணவு பொருள்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனா். இவா்களுக்காக உபே ஈட்ஸ், ஸ்விகி, ஸொமாட்டோ போன்ற நிறுவனங்களின் மூலம் காலை 7 மணிமுதல் 9.30 மணிவரை காலை சிற்றுண்டியும், மதியம் 12 மணிமுதல் பிற்பகல் 02.30 மணிவரை மதிய உணவும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை இரவு உணவும் எடுத்துச்சென்று வழங்க அரசு அனுமதித்துள்ளது.

இத்தகைய பணியில் ஈடுபடும் நபா்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலமாக காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு அடையாள அட்டை பெற விரும்பும் நபா்கள் பீமா நகரில் உள்ள அமா்வு நீதிமன்ற காவலா் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையா் சு.வேதரத்தினம் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள புகைப்படத்துடன் சமா்ப்பித்து மேற்படி அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையா் அலுவலக தொலைப்பேசி எண் 0431-2416710-ல் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Identity card for those who are in the business of delivering and distributing foods in trichy .. How to get it, deatils here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X