கேனிலிருந்து டீயை எடுத்து குடித்த போலீஸார்.. குடிச்சு பார்த்தா ஷாக்.. ஏமாற்றிய பலே பெண்.. வலைவீச்சு!
டீ கேனில் கள்ளச்சாராயம் விற்ற பெண் தலைமறைவாகி உள்ளார்
திருச்சி: டீ கேனில் இருந்த டீயை பிடிச்சு போலீசார் குடித்தனர்.. அப்பதான் தெரிந்தது, அது டீ இல்லை.. டீ மாதிரி இருந்த சாராயம் என்று... டீ கேனில் கள்ளச்சாராயம் விற்று, போலீசாரையே ஏமாற்றிய பெண்ணை இப்போது திருச்சி போலீசார் தேடி வருகிறார்கள்!!
ஊரடங்குக்கு நடுவே கள்ளச்சாராயம் பெருகி வந்து கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன.

அதனால் மார்க்கெட்டில் சரக்கு பாட்டில்கள் விற்பனை சக்கை போடு போட்டு வருகின்றன.. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.. திருட்டுத்தனமாக விற்கும் இந்த கள்ளச் சாராயத்துக்கும் கிராக்கி அதிகமாக உள்ளது.
ஒரு குவார்ட்டர் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும் விற்பனை ஆகிறது.. இந்த விலையையும் கொடுத்து குடிக்கும் நபர்களும் அதிகம். அதனால் காசு பார்ப்பதற்காகவே பல கும்பல் இப்படி சாராயம் காய்ச்சும் வேலையில் இறங்கி உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் குடிமகன்கள் கள்ளச்சாராயத்துக்கு ஏங்கி திரிந்து வருகின்றனர்.. ஆனால் போலீசார் எல்லா மாவட்டங்களிலும் விழிப்புடன் இருந்து இவர்களை கைது செய்து வருகின்றனர்.
பூமிக்கடியில் புதைத்து வைத்து கள்ளச்சாராயம், காட்டுக்குள் பாட்டிலில் வைத்து கள்ளச்சாராயம், ஏன் சுடுக்காட்டில் வைத்துகூட கள்ளச்சாராயம் என டிசைன் டிசைனாக விற்பனை நடந்து வருகிறது. இவர்களை பிடிக்கவே சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் போலீசார்!!
அப்படி இருந்தும் ஒரு பெண் போலீசாருக்கே டிமிக்கி தந்துள்ளதுதான் ஆச்சரியம்.. திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர் அந்த பெண்.. சைக்கிளில் டீ கேனை கட்டி டீ விற்று கொண்டிருந்தார்.. இதை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் சென்று, ஊரடங்கு நேரத்தில் விற்று வந்ததால், அந்த கேனை பறிமுதல் செய்தனர்.. பிறகு ஸ்டேஷனில் வந்து டீ கேனை வாங்கி கொண்டு போகும்படி சொல்லிவிட்டு அந்த கேனையும் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துவிட்டனர்.
Recommended Video
ஆனால் ரொம்ப நேரமாகியும் அந்த பெண் ஸ்டேஷனுக்கு வரவேயில்லை.. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அப்போதுதான் அந்த கேனை திறந்து, டீயை குடித்து பார்த்தனர்.. அது டீ இல்லை, டீ மாதிரி இருந்த சாராயம் என்று தெரியவந்தது.. இதனால் அதிர்ந்த போலீசார், அந்த பெண்ணை டீ விற்ற பகுதியில் சென்று தேடி பார்த்தனர்.. ஆனால் அவர் மாயமாகி இருந்தார்.. அவரை வலை வீசி தேடி வருகின்றனர்!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications