இந்த சின்னத்துக்கு ஓட்டு போடாதீங்க.. அப்புறம் குத்துதே குடையுதேனு சொல்லக்கூடாது - விஜய் ஆண்டனி
திருச்சி: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டு போடுவது தொடர்பான கேள்விக்கு இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு நடிப்பில் ஆர்வம் காட்டி தற்போது நடிகராக இருக்கிறார். இந்நிலையில் தான் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ எனும் திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ப்ரோமேஷன் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. கேகாவையை தொடர்ந்து திருச்சியில் நேற்று ப்ரோமேஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் ஆண்டனியுடன் நடிகை மிருணாளினி பங்கேற்றார்.
இந்த வேளையில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நடிகர் விஜய் ஆண்டனி பதிலளித்தார். இந்த சமயத்தில் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு விஜய் ஆண்டனி, ‛‛மக்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்க கூடிய ஆயுதம் தான் தேர்தல். இந்த நேரத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். ஒரு அரை மணிநேரம் யோசித்து பாருங்கள். என்னை கேட்டால் தனிப்பட்ட முறையில் நான் நோட்டாவுக்கு ஓட்டுப்போடுவதை வரவேற்பது இல்லை. வொஸ்ட்டில் பெஸ்ட் என்று ஒன்று இருக்கும். எல்லோரும் நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டால் நாட்டை யார் தான் ஆளப்போகிறார்கள்.
கண்டிப்பா பெஸ்ட்னு ஒருவரை தேர்வு செய்து அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். குறைந்தபட்சம் வாக்கு சதவீதம் என்பது 90 சதவீதம் வரை ஆக வேண்டும். தற்போது 60 சதவீதம் என்ற அளவில் தான் ஓட்டு சதவீதம் உள்ளது. இதனை 90 சதவீதமாக ஆக்க வேண்டும். அதை செய்யாமல் குத்துதே, குடையுதே.. நாடு சரியில்லையே என்று சொல்லக்கூடாது'' என்றார்.
அதாவது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இருப்பதை போல் நோட்டா எனும் சின்னம் இருக்கும். தொகுதியில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத நிலையில் நோட்டாவுக்கு நாம் வாக்கு செலுத்தலாம். ஆனால் நோட்டாவில் பதிவாகும் வாக்கு என்பது வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானது தான். இந்த நோட்டாவில் ஓட்டு பதிவு செய்வது என்ப தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இத்தகைய சூழலில் தான் நோட்டாவுக்கு ஓட்டளிப்பது வேஸ்ட் என இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார். தமிழகம், புதுச்சேரியை பொறுத்தவரை ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 45 நாட்கள் கழித்து ஜுன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications