திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்?
திருச்சி: திருச்சி சிறுகனூரில், 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' எனும் பெயரில் திமுக மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. 10 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடவிருக்கிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நடக்கும் இம்மாநாடு, திமுகவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாடு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும். திரைப்பட இசையமைப்பாளர் தேவா மற்றும் இசைக் கலைஞர் அப்துல் குத்தூஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு மேடைக்குச் செல்வார்.
மாநாட்டிற்காக 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமரவும், 7 லட்சம் பேர் நின்று மாநாட்டை காணவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பங்கேற்பாளர்களுக்கு குடிநீர், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன் (2021) இதே சிறுகனூர் அரங்கில் திமுக தேர்தல் சிறப்பு மாநாடும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என சொல்லப்படுகிறது.
-
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட ரகசிய அறிக்கை: சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் தலைமை - பின்னணி என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications