தமிழகத்தில் இன்னும் 50 வருடங்கள் திமுக ஆட்சி தான்! யாரும் நெருங்க முடியாது -அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி: தமிழகத்தில் இன்னும் 50 ஆண்டுகள் திமுக ஆட்சி தான் என்றும் அதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி இன்னும் ஒரு வருடம் தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

கருணாநிதி பிறந்தநாள்
கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. சென்னை, திருச்சி, தஞ்சாவூர் என வாரத்தின் எல்லா நாட்களும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அவருக்கு நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் அது தொடர்பான துறை சார்ந்த பணிகளும் அதிகம். இதற்கு மத்தியிலும் நகரம், பேரூர், ஒன்றியம் என அனைத்து ஊர்களிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.

பிரபலங்கள்
திண்டுக்கல் ஐ.லியோனி, போஸ் வெங்கட், நாஞ்சில் சம்பத், தமிழன் பிரசன்னா என பிரபலமான திமுக சொற்பொழிவாளர்களை அழைத்து தனது மாவட்டத்தில் கூட்டம் போட்டு வருகிறார். இதில் நாஞ்சில் சம்பத் பேச்சுக்கு மட்டும் விசில் சத்தமும், கரவொலி சத்தமும் கூட்டத்தில் அள்ளுகிறது. பேச்சாளர்களை வைத்து கூட்டம் நடத்தினாலும் கூட தாமும் அந்த விழாவில் ஆஜராகி கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகிறார் அன்பில் மகேஷ்.

எடப்பாடிக்கு பதிலடி
தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூரில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் இன்னும் 50 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தான் நடைபெறும் என்றும் யாரும் நெருங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
Recommended Video

மக்கள் இயக்கம்
திமுகவை பொறுத்தவரை அது வெறும் அரசியல் கட்சி மட்டுமில்லை என்றும் அது ஒரு மக்கள் இயக்கம் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் கேட்பதற்கு முன்னரே அவர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அதை செயல்படுத்தக் கூடிய கட்சி திமுக என்றும் அவர் பேசினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications