ஒருத்தர்தான் வேலை பாக்குறீங்களா? திடீரென கிட்சனுக்குள் நுழைந்த அன்பில்.. வைரலாகும் வீடியோ!
மணப்பாறை: மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென ஆய்வு செய்தார்.
Recommended Video
தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்றத்தில் இருந்து அமைச்சர்கள் அடிக்கடி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பேருந்தில் ஆய்வு செய்வது, காவல் நிலையத்தில், அம்மா உணவகத்தில் ஆய்வு செய்வது என்று தீவிரமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அன்பில் மகேஷ்
இந்த நிலையில் முதல்வர் ஒரு பக்கம் ஆய்வு பணிகளை செய்து வருவது போலவே அமைச்சர்களும் அடிக்கடி தங்கள் துறைகளில் முக்கிய சோதனைகளை நடத்தி வருகிறார்கள். முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். அரசு பள்ளிகளில் அடிக்கடி இவர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.

பள்ளிகள்
நேரடியாக அரசு பள்ளிகளுக்கு செல்லும் இவர் அங்கு மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் பேசி சோதனைகளை செய்து வருகிறார். முக்கியமாக பள்ளிக்கூடங்களில் இருக்கும் சத்துணவு கூடங்களில் அடிக்கடி அமைச்சர் அன்பில் மகேஷ் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு உணவு எப்படி சமைக்கப்படுகிறது. உணவுக்கூடம் சுத்தமாக இருக்கிறதா என்று சோதனைகள் செய்து வருகிறார்.

மருங்காபுரி
அந்த வகையில் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார். அங்கு சமையல் கூடத்திற்குள் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், சாப்பாடு எப்படி இருக்கிறது. ஒரு ஆள்தான் இருக்கிறீர்களா.. எத்தனை பேருக்கு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி, பின்னர் அங்கேயே உணவை சோதித்து பார்த்தார்.
|
ஆய்வு செய்தார்
தான் ஆய்வு மேற்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்காகச் சமைத்துக் கொண்டிருந்த உணவைச் சாப்பிட்டு தரத்தையும், சுவையையும் ஆய்வு செய்தேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications