"வெளியே தான் புலி! ஆனா வீட்ல.." குலுங்கி சிரித்த அன்பில் மகேஷ்! செஞ்சி மஸ்தான் ரியாக்ஷன் தான் ஹைலைட்
திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன் பேசுவதை அருகே இருந்த அமைச்சர்கள் செஞ்சி மஸ்தானும், அன்பில் மகேஷும் ரசித்துக் கேட்டார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. திமுகவின் பல அமைப்புகள் சார்பிலும் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

லோக்சபா தேர்தலும் நெருங்கிவிட்ட நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்ச்சிகளைப் பிரச்சாரம் போலவும் திமுக மேற்கொண்டு வருகிறது. இதனால் அனைத்து ஊர்களுக்கும் தொடர்ந்து கருணாநிதியின் நூற்றாண்டு விழா சார்ந்த நிகழ்ச்சிகளை திமுக தொடர்ந்து நடத்தி வருகிறது.
திமுக நிகழ்ச்சி: அப்படி கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் அம்மாவட்ட திமுக மற்றும் மாநகர அயலக அணி சார்பாக நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் ராமச்சந்திரன் பேட்டி தான் ஹைலைட்டாக அமைந்தது. வெளியே எவ்வளவு வீரமாக இருந்தாலும் வீட்டில் அமைதியாகத் தான் இருக்க வேண்டும் என அவர் சொன்னதை அருகே இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானும் ஆமோதிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் குலுங்கிச் சிரித்தார். அவரது இந்த பேச்சு தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பேராசிரியர் ராமச்சந்திரன்: இந்த நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் ராமச்சந்திரன், "எனக்கு இதுபோன்ற கூட்டங்களில் பேசி பழக்கம் இல்லை. இதுதான் முதல் கூட்டம். நான் கூட முதலில் பயந்தேன். நான் கூட எங்கு திடீரென நடுவில் வாழ்க வாழ்க என கத்துவார்களோ.. சடர்னு எழுந்து போதும் நிறுத்து என்பார்களோ என்ற பதற்றம் எல்லாம் எனக்கு இருந்தது. நான் மேடையில் எறியது முதல் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு ரொம்பவே ஆச்சரியம்.
கலகல பேச்சு: ஆண்கள் பேசாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை" என்று சொன் அவர் கொஞ்சம் கேப் விட்டார். அப்போது கூட்டத்தில் மெல்லச் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய அவர், "ஏனென்றால் அவர்கள் வீட்டில் அப்படி தான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். வீட்டில் உஸ் என்றால் அவ்வளவு தான். நான் எல்லாம் இவ்வளவு பேசுகிறேன்ல்ல.. வீட்டில் எதாவது சொன்னால் அவ்வளவு தான் சப்த நாடியும் அடங்கிவிடும்" என்றார்.
அப்போது அருகே அமர்ந்து இருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் "நானும் தான்" என்பது போல வணக்கத்தைப் போட்டார். உடனே ராமச்சந்திரன், "உங்களை விட்டுவிட்டேனா.. நானும் அப்படி தான் என அமைச்சரும் கூடச் சொல்கிறார் பாருங்க ஆனால் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார் பாருங்கள்.. அதுதான் திமுகவின் கண்ணியம்" என்று அவர் தெரிவித்தார்.
பேராசிரியர் ராமச்சந்திரன் பேசியதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆமோதித்த போது, அருகே இருந்த அன்பில் மகேஷ் குலுங்கிச் சிரித்தார். இது தொடர்பான வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications