லால்குடி, மணப்பாறை, ஸ்ரீரங்கம்.. 3 தொகுதிகளிலும் அடிமட்ட அளவில் இறங்கிய திமுக.. கே.என்.நேரு வார்னிங்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் லால்குடி, ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளில் திமுக அடிமட்ட அளவில் தொண்டர்களை பணியாற்ற அறிவுறுத்தி இருக்கிறது. இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக சில பணியாற்றாத நிர்வாகிகளை அழைத்து வார்னிங் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் திமுக முழுமையாக கைப்பற்றியது. அதில் ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. மணப்பாறை தொகுதியில் மீண்டும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக அப்துல் சமாத் களத்தில் இருக்கிறார்.

அதேபோல் ஸ்ரீரங்கம் தொகுதியில் பழனியாண்டிக்கு பதிலாக துரைராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பாக லீமா ரோஸ் களமிறக்கப்பட்டுள்ளார். உடையார் சமூத்தைச் சேர்ந்த கிறிஸ்தவரான இவர், திமுக வேட்பாளர் பாரிவள்ளலுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறார்.
லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர் என்பதால், அவருக்கு பணியாற்ற அதிமுகவினர் முட்டி மோதுகின்றனர். இதனால் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் செல்லும் இடங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இந்த 3 தொகுதிகளில் அதிமுக மிகப்பெரிய சவாலை திமுகவுக்கு அளித்து வருகிறது.
இதனை உணர்ந்த திமுக தலைமை உடனடியாக மண்டல பொறுப்பாளரான கே.என்.நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் இருவரையும் அழைத்து எச்சரித்துள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் சீட் கிடைக்காத திமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் பணியாற்றாமல் இருப்பது திமுகவுக்கு பின்னடைவாக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்பின் அமைச்சர் கே.என்.நேரு கீழ்மட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து உடனடியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இன்னொரு பக்கம் பணியாற்றாமல் இருக்கும் நிர்வாகிகளுக்கும் நேரடியாக எச்சரிக்கை சென்றிருக்கிறது. இதனால் அடுத்த 3 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் செல்வாக்கு இல்லாமல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பலப்படுத்த நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட உள்ளனர்.
இதே பாணியை அமைச்சர் அன்பில் மகேஷ்-ம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மத்தியிலும் அறிவுறுத்தி இருக்கிறார். திருச்சியின் 9 தொகுதிகளில் ஒன்று குறைந்தால் கூட இரு அமைச்சர்களுக்கும் கெட்ட பெயர் உருவாகும். இதனால் திருச்சி மட்டுமல்லாமல் டெல்டா மாவட்டங்கள் முழுக்கவே திமுக உயர்மட்ட நிர்வாகிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications